tamilnadu

img

வட்டார வளர்ச்சி அலுவலர் கடத்தல் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது

வட்டார வளர்ச்சி அலுவலர் கடத்தல்  ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது

நாமக்கல், செப். 8 – நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளை யத்தைச் சேர்ந்த கிராம ஊராட்சி வட்டார  வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் (50) கடத்தப் பட்ட வழக்கில், ஊராட்சி செயலாளர் நந்த குமார் மற்றும் சிவா உட்பட இருவரை காவல் துறை கைது செய்தனர்.  கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி இரவு  பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் இருந்து நாமக்கல்லுக்கு காரில் புறப் பட்ட பிரபாகரன், இரவு 9 மணி முதல் வீடு  திரும்பவில்லை. அவரது மனைவி யசோதா  அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில், பிரபாகரனின் கார் நாமக் கல் அருகே உள்ள வேல கவுண்டம்பட்டி பகு தியில் நிற்பது கண்டறியப்பட்டது. அவரை கடத்தியவர்கள், போலீசாரின் தேடுதல் வேட்டையை அறிந்து, தஞ்சாவூர் அருகே அவரை இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து, பிரபாகரனை மீட்ட காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி னர். விசாரணையில், காடச்சநல்லூர் ஊராட்சி  செயலாளர் நந்தகுமார், பல்வேறு முறைகேடு களை செய்ததை பிரபாகரன் கண்டித்துள் ளார். இதனால் ஏற்பட்ட கருத்து மோதலில், பிரபாகரனின் செல்வச் செழிப்பைக் கண்டு அவரை கடத்தி பணம் பறிக்க நந்தகுமார் திட்டமிட்டது தெரியவந்தது. நந்தகுமார் தனது நண்பர்கள் நால்வரு டன் சேர்ந்து, பிரபாகரனை கடத்தி ஒரு கோடி  ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். போலீசார் நெருங்குவதை அறிந்ததால், அவரை தஞ் சாவூர் சாலையில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த வழக்கில், நந்தகுமார் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த சிவா ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மற்ற நான்கு பேரை தேடி  வருகின்றனர். பணத்திற்காக ஊராட்சி செயலாளரே மூளையாக செயல்பட்டு வட்டார வளர்ச்சி  அலுவலரை கடத்திய சம்பவம் பள்ளிபாளை யத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.