கேரளாவிலிருந்து கொண்டு வரப்பட்ட மீன் இறைச்சி கழிவுநீர் தமிழகத்தில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம் புதூர் தேசிய நெடுஞ்சாலை கொட்டப்பட்டதைத் தடுத்து லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்
நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவருக்குச் சொந்தமான டிஎன்75 ஏஜெ1785 என்ற வாகனத்தில் கோழிக்கோட்டிலிருந்து தூத்துக்குடி பகுதியில் மீன் எண்ணெய் மற்றும் கோழி தீவனம் தயாரித்துவரும் எம் பி என் என்ற தனியார் நிறுவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட வாகனத்திலிருந்து மீன் கழிவுநீர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம் புதூர் தேசிய நெடுஞ்சாலையில் திறந்து விடப்பட்டது இதனைக் கண்ட பொதுமக்கள் தடுத்து கோமங்கலம் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
இப்பிரச்சனை சம்பந்தமாக கோமங்கலம் பகுதி பொதுமக்கள் கூறியதாவது கேரளா மாநிலத்தில் இருந்து கோழி இறைச்சி, மருத்துவ கழிவுகள் மற்றும் மீன் கழிவுகள் தமிழகப் பகுதிகளில் கொட்டி வருகின்றனர். இது போன்ற நடவடிக்கைகளை உடனடியாக தடை செய்ய வேண்டும்