இன்ஸ்டாகிராமில் போலி ஐ.டி உருவாக்கி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை கைது செய்தனர்.
கோவை – குனியமுத்தூர் மேட்டுக்காடு பகுதியை சேர்ந்த நியாஸ்(வயது(23) என்பவர் இன்ஸ்டாகிராம் இணையதளத்தின் மூலம் பெண் போல போலியான புகைப்படத்தை பதிவிட்டு பல்வேறு பெண்களிடம் நட்பு ஏற்படுத்தியுள்ளார். இதில், இவருடன் பழக்கமான திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவியுடன் பெண் குரலில் பேசி நட்புடன் பழகி கல்லூரி மாணவியிடம் அவரது புகைப்படங்களை பெற்றுள்ளார். படங்களை பெற்ற நியாஸ் அதனை மார்பிஃங் செய்து ஆபாச படமாக உருவாக்கி அதனை மீண்டும் கல்லூரி மாணவிக்கு அனுப்பி நிர்வாணமாக வீடியோ கால் அழைப்பில் வர வேண்டும், இல்லை என்றால் இந்தப் புகைப்படங்களை இணையதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனை அடுத்து அந்த கல்லூரி மாணவி திருப்பூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மாணவியின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கிரைம் தொழில்நுட்ப உதவியுடன் குற்றச்செயலில் ஈடுபட்ட நியாஸை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர். அவரிடமிருந்து பெற்ற செல்போனை சோதனை செய்ததில் பல்வேறு இளம் பெண்களின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்திருந்தது தெரிய வந்ததை அடுத்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.