tamilnadu

கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் சோதனை

கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் சோதனை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு?

உதகை, மே 6- வருமானத்திற்கு அதிகமாக ரூ.60 லட்சம் சொத்து சேர்த்ததாக கூறி கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், முள்ளிகூர் ஊராட்சி அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் ரஷ்யா பேகம். இவர் இதற்கு முன் தூனேரி மற்றும் நஞ்சநாடு பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பணிபுரிந்த காலங்களில் பட்டா மாற்றம் உள்ளிட்ட பல் வேறு வருவாய் துறை பணிகளுக்காக பொது மக்களிடமிருந்து அதிக அளவில் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி திங்களன்று அவர் மீது வழக்கு பதிவு  செய்தனர். இதைத்தொடர்ந்து செவ்வா யன்று காலை உதகை பாலிடெக்னிக் அருகே வாடகை வீட்டில் வசித்து வரும் ரஷியா பேகம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சண்முகவடிவு தலைமையில் லஞ்ச ஒழிப்பு  துறையினர் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். வீட்டில் பணம், தங்கம் அதிக அளவு உள் ளதா? என்று சோதனை செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தினர். செவ்வா யன்று காலை ஐந்து மணிக்கு தொடங்கிய சோதனை காலை 11 மணிக்கு முடிவ டைந்தது. சோதனையில் ஒரு சில ஆவணங் கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் லஞ்ச ஒழிப்பு துறையினர் கிளம்பி சென்றனர்.  இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீ சார் கூறுகையில், தூனேரி கிராமத்தில் அவ ருடைய தம்பி பெயரில் வீடு கட்டி வருகி றார். அதேபோல் தஞ்சாவூர் அம்மாபேட்டை பகுதியில் வீடு மற்றும் கார் வாங்கியுள்ளார். 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில் கடந்த நான்கு வருடங்களில் அவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.60 லட் சத்திற்கும் மேலாக சொத்துக் குவித்துள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து மேலும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப் படும், என்றனர்.