கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் உள்ள 48-வது வார்டில், பாலாஜி நகரில் அமைந்துள்ள பூங்கா இடம் கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இந்த நிலையில், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அதிரடி உத்தரவின் பேரில் இந்த ஆக்கிரமிப்பு இன்று அகற்றப்பட்டுள்ளது.
மத்திய மண்டல உதவி நகரதிட்டமிடுநர் கோவிந்த பிரபாகரன் தலைமையில் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில், 2.6 கோடி ரூபாய் மதிப்புள்ள 13 சென்ட் பரப்பளவு கொண்ட பூங்கா இடம் ஆக்கிரமித்தவர்களிடமிருந் மீட்கப்பட்டது. இந்த நடவடிக்கை மூலம், நீண்ட காலமாக ஆக்கிரமிப்பில் இருந்த பொது இடம் மீட்கப்பட்டுள்ளது.
இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடங்களை பாதுகாப்பதில் மாநகராட்சி உறுதியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.