சாலை விபத்து: 2 பேர் பலி நாமக்கல்
, மார்ச் 26- மோகனூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், பொறியியல் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள ராசி குமரிபாளையம் பகுதியைச் சேர்ந்த நவீன் (29). இவரது மனைவி தன்யா (25), மாமியார் கோகிலா (45) ஆகியோர் மோகனூர் - நாமக்கல் சாலையில் காந்தமலை அடிவாரம் வழியாக திங்களன்று இரவு ஒரே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அணியாபுரம் பகுதியி லுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்றுவந்த, புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடியைச் சேர்ந்த பால கிருஷ்ணன் (19), அவரது நண்பரான கள்ளக்குறிச்சி மாவட் டம், கொசப்பாடியைச் சேர்ந்த இளவரசன் (18) ஆகிய இருவ ரும் இருசக்கர வாகனத்தில் எதிரில் வந்து கொண்டி ருந்தனர். இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் நவீன், தன்யா, கோகிலா ஆகியோர் சாலையில் விழுந்ததில் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அதேபோல, கல்லூரி மாணவர்கள் பாலகிருஷ் ணன், இளவரசன் இருவரும் படுகாயமடைந்தனர். இதைய டுத்து அங்கிருந்தவர்கள் மாணவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், நவீன் உட்பட மூவரை தனியார் மருத்துவமனையிலும் அனுமதித்தனர். இந் நிலையில், பாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந் தார். இளவரசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகி றது. நாமக்கல் தனியார் மருத்துவமனையில் இருந்து சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்ட தன்யா செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். நவீன், கோகிலா இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதுகுறித்து மோகனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். ஆட்சியர் அதிரடி இதற்கிடையே, பரமத்திவேலூர் வட்டத்தில் ஆய்வு பணிக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் ச.உமா, தேசிய நெடுஞ் சாலை வழியாக மீண்டும் நாமக்கல் நோக்கி வந்துகொண்டி ருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் தலைக்கவசம் அணியாமல் பயணித்ததைக் கண்டு அந்த வாகனத்தை மடக்கிப் பிடித்தார். உடனடியாக நாமக்கல் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர்கள் வாகனத்தை பறிமுதல் செய்ததுடன், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். தலைக்கவசமின்றியோ, இரு சக்கர வாகனத்தில் மூன்று, நான்கு பேரோ பயணம் செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.'
பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நாமக்கல்,
மார்ச் 26- ராசிபுரம் அருகே பெண்களுக்கான சட்டங்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி புத னன்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூர் அருகே உள்ள டான் பாஸ்கோ அன்பு இல்லம் சார்பில், பெண்களுக்கான சட்டங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டமானது புதனன்று நடைபெற்றது. நாமக் கல் மாவட்ட துணை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழு செயலாளருமான வேலு மயில் கலந்து கொண்டு, பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற சம்பவங்கள், குற்றச்சம்பவங்களில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டிய விதிமுறைகள் மற்றும் சட்டங்கள் குறித்து பெண் ்களிடையே எடுத்துரைத்தார். மேலும், அவர் பேசுகையில், பெண் பிள்ளைகளுக்கு நிறைய சட்டங்கள் வந்தாலும் பெற் றோர்கள், குழந்தைகளிடம் அன்றாடம் நடக்கும் செயல்களை கேட்பதே இல்லை. பாலியல் தொல்லை என்பது வெளியில் இருந்து வருவதில்லை. தங்களது குடும்பத்தில் இருந்து தான் அதிகளவில் வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டில் குழந்தை கள் திருமணம் நாமக்கல்லில் அதிகளவில் நடைபெற் றுள்ளது. இன்றைய இளைஞர்கள் மது போதையில் இருந்து கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகின்றனர். குற்றச் சம்ப வங்களுக்கு அதிகம் தேவைப்படுவது மது, கஞ்சாவாக உள்ளது, என்றார்.