உயர்மின் கோபுர விளக்கு அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
பாலக்கோடு அருகே உள்ள வெள்ளிசந்தை 4 ரோடு ரவுண்டானா பகுதியில், அகற்றப்பட்ட உயர்மின் கோபுர விளக்கை மீண்டும் அமைக்க வேண்டும், என அப்பகுதி பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், பிக்கனஅள்ளி ஊராட் சிக்குட்பட்ட வெள்ளிசந்தை 4 ரோடு ரவுண்டானா பகுதியில் வாகன ஓட்டி கள், பொதுமக்களின் நலன் கருதி உயர்மின் கோபுர விளக்கு அமைக் கப்பட்டிருந்தது. கடந்த ஒரு வருடத் திற்கு முன்னர் சாலை சீரமைப்பு செய்த போது, உயர்மின் கோபுர விளக்கு அகற்றப்பட்டது. ஆனால், மீண்டும் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஊராட்சி நிர்வாகம் தான் இதனை சரி செய்ய வேண்டும், என்கின்றனர். ஆனால், பிக்கனஅள்ளி ஊராட்சித் தலைவர் பொதுமக்களின் கோரிக்கையை கிடப்பில் போட்டதால், இரவு நேரங்க ளில் இருள் சூழ்ந்து தொடர் வாகன விபத்துக்களும், திருட்டு சம்பவங்க ளும் நடைபெற்று வருகின்றன. மேலும், வெள்ளிசந்தை பகுதி யில் வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற் பட்ட தண்ணீர் டேங்குகள் தனிநபர்க ளின் தூண்டுதலால் ஊராட்சி நிர் வாகத்தால் அகற்றப்பட்டுள்ளன. கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், தண்ணீருக்காக நீண்ட தூரம் பெண்கள் குடத்துடன் அலைந்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக உயர் மின் கோபுர விளக்கு மற்றும் மினி தண்ணீர் டேங்குகளை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.