tamilnadu

img

மதுக்கடைகளை அகற்றக்கோரி காந்தி சிலையிடம் மனு

மதுக்கடைகளை அகற்றக்கோரி காந்தி சிலையிடம் மனு

மேட்டுப்பாளையம், அக்.2- மேட்டுப்பாளையத்தில் பயணிகள் கூடும் பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள டாஸ்மாக் மது கடைகளை அகற்றக் கோரி மகாத்மா சிலையிடம் சமூக ஆர்வலர்கள் சார்பில் மனு அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப் புறங்களில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி பொதுமக்கள் சார்பில் காந்தி சிலையிடம் மனு வழங்கப் பட்டது. இந்நிகழ்விக்கு நம்ம மேட்டுப்பாளையம் சமூக நலக்குழு ஒருங்கிணைப்பாளர் பாஷா தலைமை வகித்தார். மனுவில், பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புறங்க ளில் உள்ள டாஸ்மாக் கடைகள் பொதுமக்கள், பெண்கள், மாணவிகள், முதியோர் மற்றும் பயணிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளன. மது போதையில் அலங்கோலமாக பலர் பேருந்து நிலையத்தில் விழுந்து கிடப்பதும் பய ணிகளிடம் போதையில் தகராறு செய்யும் நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை சமூக அமை தியையும் மக்களின் பாதுகாப்பையும் பாதிக்கின்றன. பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மதுவிற்கு எதிராக போராடிய மகாத்மா காந்தியின் சிலையிடம் மனு அளிப்ப தாக தெரிவித்துள்ளனர். முன்னதாக, இந்நிகழ்வில் பங்கேற்ற வர்கள் மதுவுக்கும் போதைக்கும் எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.