குடிநீர் விநியோகப் பணியாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்கக்கோரி மனு
ஈரோடு, மார்ச் 26- பெருந்துறை பகுதியில் குடிநீர் விநியோ கப் பணியாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வலியுறுத்தி, திமுகவின் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மத்திய மாவட்டப் பொறுப்பாளருமான தோப்பு என்.டி.வெங்க டாசலம் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியரி டம் மனு அளித்தார். அம்மனுவில், ஈரோடு மாவட்டம் பெருந் துறை தொகுதியில் புதிய திருப்பூர் கூட்டுக் குடிநீர் திட்டம், கொடிவேரி குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்தத் திட் டங்களின் கீழ் குடிநீர் விநியோகிக்க, பம்ப் ஆப் ரேட்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோடைக் காலம் தொடங்க உள்ள நிலையில், குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விசா ரணையில், விநியோகப் பணியாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படாததால், குடிநீர் விநியோகப் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக் கப்படுகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, உள்ளாட்சி நிர்வாகத்துடன் பேசி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோடைக்காலத்தில் தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு காண அவிநாசி - அத்திக் கடவு திட்டத்தின் மூலம் குளங்களில் நீர் நிரப்ப வேண்டும். வெறி நாய் கடித்து ஆடு, மாடு, கோழிகளை இழந்த விவசாயிகள் குறித்து முழுமையாக கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
சரக்கு வாகனம் மீது லாரி மோதி விபத்து
தொப்பூர் கணவாய் அருகே சரக்கு வாக னம் மீது, டேங்கர் லாரி மோதி விபத்துக்குள் ளானதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட் டது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட் டம், தொப்பூர் கணவாய், கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலை காவலர் குடியி ருப்பு பகுதி அருகே, புதனன்று காலை புனே விலிருந்து பெருந்துறைக்கு டேங்கர் லாரி ஒன்று கச்சா எண்ணை பாரம் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. செந்தில் என்பவர் லாரியை இயக்கியுள்ளார். அப்போது ஓட்டுந ரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி, முன் னால் சென்று கொண்டிருந்த சரக்கு வாக னத்தின் மீது மோதி, 2 வாகனங்களும் சாலை யில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின. இதில் டேங்கர் லாரி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து கச்சா எண்ணை வெளியேறியது. இந்த டேங்கர் லாரியை ஓட்டி வந்த செந்தில்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் தொப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரி வித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம்பட்ட செந் தில்குமாரை மீட்டு, தருமபுரி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். இதன்பின் கவிழ்ந்த வாகனங்களை அப் புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இவ் விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இவ்விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இடுகாட்டிற்கு செல்லும் பாதை மறிப்பு: சாலை மறியல்
வாழப்பாடி அருகே உடல் நலக்கு றைவால் உயிரிழந்த அண்ணனின் உடலை இடுகாட்டிற்கு கொண்டு செல்ல விடாமல், வழிப்பாதையை மறைத்த தம்பியை கண்டித்து உறவி னர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள பேளூர் நடுப்பட்டி கிரா மத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவ ருக்கு ஆறுமுகம் மற்றும் சின்னதம்பி ஆகிய இரு மகன்கள் உள்ளனர். அண் ணன். தம்பி இருவருக்கும் சொத்து தக ராறு இருந்து வந்ததாக கூறப்படுகி றது. இந்நிலையில், ஆறுமுகம் உடல் நலக்குறைவால் காலமானார். இதைத் தொடர்ந்து, உடலை அடக்கம் செய்வ தற்காக சின்னத்தம்பி நிலத்தின் வழி யாக இடுகாட்டிற்கு கொண்டு செல்ல ஆறுமுகத்தின் உடலை எடுத்துச் சென்ற னர். ஆனால், இடுகாட்டிற்கு உடலை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து, வழி பாதையை சின்னத்தம்பி மறைத் ததாக கூறப்படுகிறது. இதனால் துக்க நிகழ்விற்கு வந்த ஆறுமுகத்தின் உற வினர்கள், அப்பகுதி பொதுமக்கள் சேலம் - பேளூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வாழப்பாடி போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட் டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.