தீக்குழி அருகே குழந்தையுடன் விழுந்த நபர்
பள்ளிபாளையத்தில் கோவில் திருவிழாவின் போது, தீக்குழி அருகே பச்சிளம் குழந்தையுடன் தவறி விழுந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியிலுள்ள ஸ்ரீஅக்னி மாரியம்மன் கோவில் தீ குண்டம் இறங்கும் திருவிழா புதனன்று நடைபெற் றது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக் கான பக்தர்கள், சிறுவர், சிறுமியர், இளம் பெண்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர். ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர், தனது ஆறு மாத பெண் குழந்தையுடன் தீ மிதிப்பதற்காக வந்தார். அப்போது அக்னி குண்டத்தில் நடந்து செல் லும் போது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி அக்னி குண்டத்தில் மிக அருகிலேயே தன் குழந்தையுடன் விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த வர்கள் குழந்தையையும், அவரையும் மீட்டனர். இச்சம்ப வத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
குட்கா கடத்திய 7 பேர் கைது ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்
சேலம், ஏப். 2 – பெங்களூருவிலிருந்து சேலத்திற்கு மூன்று சொகுசு கார்களில் குட்கா மற்றும் ஹான்ஸ் போன்ற புகை யிலைப் பொருட்களைக் கடத்தி வந்த ஏழு பேரை சேலம் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிட மிருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப் பட்டது. சேலம் நகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சேலம் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. இதையடுத்து, மாநகர உதவி ஆணையர் ஹரி சங்கரி தலைமையில் ஆறு பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக, சேலம் நகரம் மற்றும் மாவட்டப் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களை இந்த தனிப்பிரிவு போலீசார் கண் காணித்து வந்தனர். இந்நிலையில், செவ்வாய்பேட்டை பகுதியில் சொகுசு காரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட் களை விற்பனை செய்த மணியனூரைச் சேர்ந்த லிங்கு ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணை யில், அவர் சேலம் நகரின் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தது தெரி யவந்தது. இதனைத் தொடர்ந்து, சேலம் மாநகர மற்றும் செவ் வாய்பேட்டை போலீசார் இணைந்து நடத்திய சோதனை யில், 1,500 கிலோ எடையுள்ள ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக பெங்களூரு கடை உரிமையாளர் உட்பட ஏழு பேர் கைது செய்யப் பட்டனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அணையில் நீச்சல் அடித்த யானை
பரம்பிக்குளம் அணையில் நீச்சல் அடித்து கரை யைக் கடந்த ஒற்றைக்காட்டு யானை வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரளம் பகுதியில் தமிழக பொதுப்பணித்துறை அதி காரிகள் கட்டுப்பாட்டில் உள்ளது பரம்பிக்குளம் அணை. இந்த அணை கேரளம் வனப்பகுதியை சுற்றி உள்ள தால் அவ்வப்போது வனத்தில் உள்ள புலி, யானை, சிறுத்தை, குரங்கு, ஓநாய் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக அணைக்கு வந்து செல்வது வழக்கம். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பெரும்பாலும் விலங்குகள் அணைப்பகுதி அருகே காணப்படுகிறது. இந்நிலை யில் 72 அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணை யின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 51.25 அடி யாக உள்ளது. கிட்டத்தட்ட நிரம்பி காணப்படும் பரம்பிக் குளம் அணையில் ஒற்றைக்காட்டு யானை செவ்வா யன்று மதியம் நீச்சல் அடித்தபடி அக்கறையிலிருந்து இக்கரைக்கு வந்துள்ளது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
காகத்தை கண்டு அச்சப்பட்ட யானை
இதேபோன்று, புதனன்று தண்ணீருக்காக குட்டியு டன் வந்த மூன்று காட்டு யானைகள் கோவை தடாகம் பகுதியில் உள்ள பொன்னூத்து அம்மன் கோவில் அருகே உள்ள வனத் துறையினர் வைத்திருந்த தண்ணீர் தொட்டியில் யானைகள் தண்ணீர் அருந்திக் கொண்டிருந்தது. அப்பொழுது அங்கு வந்த ஒரு காகம், தொட்டியில் மேல் அமர்ந்தது. இதைக் கண்டு அச்சமடைந்த யானைகள் பின் வாங்கின அந்தக் காட்சி கள் அங்கு இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்திருந்தார். அந்தக் காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வரு கிறது.