பொள்ளாச்சி, ஏப்.30- பொள்ளாச்சி அருகே தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த தடைசெய்யப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பான் மசாலா பாக்கெட்டுகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம்,
பொள்ளாச்சி கோட்டூர் ரோடு பகுதியில் மணியன் ஸ்டோர்ஸ் என்ற குடோன் இயங்கி வருகிறது. இந்த குடோனிலிருந்து தடை செய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்கா பாக்கெட்டுகள் அப்பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படுவதுடன் பல்வேறு இடங்களில் புழக்கத்தில் விடுவதாகவும் புகார் எழுந்து வந்தது. இதனையடுத்து பொள்ளாச்சி கிழக்கு காவல் துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் நடத்தப்பட்ட ஆய்வில் குடோனில் ஒரு அறையில் தடை செய்யப்பட்ட பான் மசாலாக்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபடிக்கப்பட்டது . இதில் குடோனிலிருந்த சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான 70 கிலோ பான்மசலாக்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பான் மசாலா பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் குடோன் உரிமையாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.