tamilnadu

img

உருளைத் தடுப்பான்கள் பொருத்தும் பணி நிறைவு

உருளைத் தடுப்பான்கள் பொருத்தும் பணி நிறைவு

நாமக்கல், ஏப்.20- கொல்லிமலைக்குச் செல்லும் மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் விபத்தை தடுக் கும் வகையில் உருளைத் தடுப்பான்கள் பொருத்தும் பணி நிறைவடைந்துள் ளதென, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள முக்கிய சுற்று லாத் தலங்களில் ஒன்றான கொல்லி மலையின் இயற்கை எழில் சூழ்ந்த  மலை அழகை ரசிக்கவும், குளிர்ச்சி யான காலநிலையை அனுபவிக்கவும், அருவிகளில் குளித்து மகிழவும் ஏராள மான சுற்றுலாப் பயணிகள் வந்து செல் கின்றனர். தற்போது கோடைக்காலம் என்பதால் வழக்கத்தை காட்டிலும் சுற்று லாப் பயணிகளின் வருகை அதிகரித் துள்ளது. கொல்லிமலைக்கு காரவள்ளி அடிவாரத்தில் இருந்து (23 கி.மீ. தொலைவு) 70 கொண்டை ஊசி வளைவு களை கடந்து செல்ல வேண்டும். வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்க ளில் வருவோர் மலைப்பகுதி வளைவு களில் திரும்பும் போது எதிர்பாராதவித மாக விபத்தில் சிக்குகின்றனர். பெரும் பாலான ஓட்டுநர்கள் மலைப்பாதை யில் வாகனத்தை எவ்வாறு இயக்குவது என தெரியாமல் தடுமாறுகின்றனர். இத னால், தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் கொல்லிமலை மட்டுமின்றி மலைகளில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்களில் வாகன விபத்துகளைத் தடுப்பதற்காக சாலையோரங்களில் உருளைத் தடுப்பான்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொல்லிமலையில் ரூ.6.85 கோடி யில் எந்தெந்த வளைவுகளில் உருளைத் தடுப்பான்கள் அமைக்க வேண்டும் என்பது தொடர்பாக கடந்தாண்டு டிசம் பர் மாதம் அதிகாரிகள் அளவீடு செய்த னர். அந்த வகையில் முதல்கட்டமாக 29 இடங்களில் அவற்றை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. முதற்கட் டமாக 50 மற்றும் 64 ஆவது கொண்டை ஊசி வளைவுகளில் உரு ளைத் தடுப்பான்கள் பொருத்தப்பட்டு சோதனை நடைபெற்றது. அவை வெற் றிக்கரமாக அமைந்ததால் மீதமுள்ள இடங்களில் உருளைத் தடுப்பான்கள் பொருத்துவதற்கான பணிகள் மேற் கொள்ளப்பட்டன. கடந்த நான்கு மாதங்களில் 29 இடங்களில், ஒவ்வொரு இடத்திலும் சுமார் 30 அடி நீளத்துக்கு  உருளைத் தடுப்பான்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. தற்போது அப்பணி கள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.  இதனால் வாகனங்கள் வளைவு களில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து இந்த தடுப்பான்கள் மீது மோதி னாலும் வாகனங்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் ஆபத்து ஏற்படாது. உருளைத் தடுப்பான்கள் லாவகமாக வாகனத்தை திருப்பிவிடும். இதனால்  ஓட்டுநர்கள் அச்சமின்றி வாகனத்தை  இயக்க முடியும், என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.