tamilnadu

img

பழங்குடியின குடும்பத்திற்கு நிலம் வழங்க வலியுறுத்தல்

பழங்குடியின குடும்பத்திற்கு நிலம் வழங்க வலியுறுத்தல்

உதகை, அக்.2- பழங்குடியின குடும்பத்திற்கு   தலா ஒரு ஏக்கர் நிலம் வழங்க  வேண்டும் என மலைவாழ் மக்கள்  சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் நீலகிரி மாவட்ட மாநாடு, கூடலூரிலுள்ள சிபிஎம் அலுவல கத்தில் வியாழனன்று சுந்தரம் தலை மையில் நடைபெற்றது. சிபிஎம் ஏரியா செயலாளர் எம்.ஆர்.சுரேஷ் வரவேற்றார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் யோகண்ணன் துவக்கவுரையாற்றினார். சிஐடியு துணைச்செயலாளர் கே.ராஜன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் சி.கே.மணி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், அனைத்து  பழங்குடியின குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் தலா ஒரு ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். பழங்குடியினர் களுக்கு வீடு மற்றும் மின்சார இணைப்பு வழங்க வேண்டும். 10 ஆம்  வகுப்பு படித்து முடித்த பழங்குடியின  இளைஞர்களை அரசு கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி, வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் மாவட் டத் தலைவராக எம்.என்.கேசவன், செயலாளராக சி.கே.மணி, பொரு ளாளராக என்.சுந்தரம், துணைத் தலைவராக அடையாள குட்டன், துணைச்செயலாளராக மணி உட்பட 13 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் தங்கச்சன் நன்றி கூறினார்.