tamilnadu

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அழிவின் விளிம்பில் சிட்டுக்குருவி
கோவையில் விழிப்புணர்வு பேரணி

உலக சிட்டுக் குருவி தினத்தை முன்னிட்டு, அழிந்து வரும் சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்க வலியுறுத்தி கோவையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முன்பு வீடுகளில் சாதாரணமாக காணப்பட்ட சிட்டுக்குருவிகள், தற்போது அரிதாகிவிட்டன. இதனால், அவற்றின் இனத்தை பாதுகாக்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உலக சிட்டுக் குருவி தினமான வியாழனற்று, நேச்சர் என்விரான்மென்ட் சர்வீஸ் டிரஸ்ட் (NEST) மற்றும் தமிழ்நாடு வனத்துறை இணைந்து சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமி மண்டல மையம் அருகே தொடங்கிய இந்த பேரணியை, கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் டி.வெங்கடேஷ் IFS ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் மற்றும் கோவை நகர போக்குவரத்து துணை ஆணையர் அசோக் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இந்த பேரணியில், சிட்டுக்குருவிகளின் முக்கியத்துவம் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு சிட்டுக்குருவிகளுக்கான தீவனப் பெட்டிகள் இலவசமாக வழங்கப்பட்டன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஏராளமானோர் பேரணியில் பங்கேற்றனர்.

நிழற்குடை இல்லை: வெயிலில் காயும் பயணிகள்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலை யில், பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தத் தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள், பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்தி வரு கின்றனர். இங்கிருந்து ஈரோடு, திருச்செங் கோடு, சேலம், நாமக்கல் ராசிபுரம் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சொந்த வேலை யின் காரணமாக தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர். மேலும், பள்ளிபாளையம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் படித்து வரும் 3 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த பேருந்து நிறுத்தத்தைத் தான் பயன் படுத்தி வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பகு தியில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், ஏற்கனவே இருந்த நிழற்குடை கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன. தற் போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலின் தாக்கத்தால் அருகி லுள்ள கடைகளின் அருகே, வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள நிழலுக்காக தஞ்சமடைந்து வருகின்றனர். எனவே, நக ராட்சி நிர்வாகம் பேருந்து நிறுத்தத்தில் போர்க் கால அடிப்படையில் நிழற்குடைகள் அமைத் துத்தர வேண்டும், என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.