tamilnadu

img

விவசாயி-யின் நிலத்தை அபகரிக்க போலி பத்திரப்பதிவு

விவசாயி-யின் நிலத்தை அபகரிக்க போலி பத்திரப்பதிவு

நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

தருமபுரி, மே 3- விவசாயி-யின் நிலத்தை அப கரிக்க போலி பத்திரபதிவு செய்து மோசடி செய்த நபர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. தருமபுரி வட்டம், இலக்கியம் பட்டி ஊராட்சிக்குட்பட்ட வி.ஜெட்டி அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சி. மணி. சர்வே எண்: 601/1, 602/1ஏ, 603/1,597,598,604/1பி, 605/1டி ஆகிய நிலத்தில் நூறாண்டு காலம் அனுபவத்தில் இருந்து, இவர் பயிர் சாகுபடி செய்து வருகிறார். இந்நிலத்தை கடந்த 2000 ஆம் ஆண்டு நில உடமையாளர் ராமா னுஜம் என்பவர், சி.மணிக்கு விற் பனை செய்ய ஒப்பந்தம் செய்துள் ளார். 2025 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அதே நிலத்தை நல்லம்பள்ளி ஒன்றிய அதிமுக முன்னாள் செய லாளர் பூக்கடை முனுசாமி என்ப வருக்கும் விற்பனை செய்துள்ள தாக கூறப்படுகிறது. இந்நிலையில், பூக்கடை முனுசாமியும், அவரது  அடியாட்களும், மணியை வலுக் கட்டாயமாக நிலத்தை விட்டு வெளி யேற்ற முயற்சித்தனர். புல்டோசர் மூலம் வீட்டை இடிந்து கிணற்றில் தள்ளியுள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக் கப்பட்டுள்ளது. தருமபுரி நீதிமன்றத் தில் வழக்கு நடைபெற்று வருகி றது. இந்நிலையில், வியாழனன்று மீண்டும் பூக்கடை முனுசாமியும், அவரது அடியாட்களும் மணியின் நிலத்தில் அத்துமீறி நுழைந்து, அவரது மனைவி, மகன் ஆகி யோரை கடுமையாகத் தாக்கியுள் ளனர். மேலும், விவசாய நிலத்தில் ரியல் எஸ்டேட் செய்ய, அங்குள்ள  பயிர்களை ஜேசிபி இயந்திரங் களை கொண்டு அழித்து, கம்பி வேலி அமைக்கும் பணியில் ஈடு பட்டு வருகின்றனர். இதுகுறித்து தருமபுரி நகர காவல் நிலையத் தில் புகாரளித்தும் எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. அதி முக பிரமுகரின் இத்தகைய அத்து மீறலை, சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. பூக்கடை முனுசாமி மற்றும் அவரது அடியாட்கள் மீது  வழக்குப்பதிவு செய்து கைது  செய்ய வேண்டும். குத்தகை விவ சாயி மணியின் உரிமையை நிலை நாட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தருமபுரி ஒன்றி யக்குழு சார்பில் வலியுறுத்தியுள் ளது. மேலும், இதனைக் கண்டித்து மே 5 ஆம் தேதியன்று தருமபுரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.