tamilnadu

img

முட்டை விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி

முட்டை விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி

முட்டை விலை நிர்ணயம் செய்வ தில் குளறுபடி நிலவுவதாக குற்றஞ் சாட்டி, நாமக்கல்லில் உள்ள கோழிப் பண்ணையாளர் சங்க அலுவலகத்தை சிறிய கோழிப் பண்ணையாளர்கள் முற் றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மண்டலத்திலுள்ள ஆயி ரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணை கள் மூலம் தினசரி 6 கோடி முட்டை கள் உற்பத்தியாகின்றன. இந்த முட்டை கள் சத்துணவு திட்டத்திற்கும், வெளி  மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின் றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு மண்டல அலுவலகம் நாள்தோ றும் முட்டைக்கான விலையை நிர்ண யித்து அறிவித்து வருகிறது. கடந்த  சில நாட்களாக முட்டை விலை உயர் வதும், குறைவதுமாக உள்ளது. முட்டை  வியாபாரிகள், ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கி விலை குறைப்பை  அமல்படுத்தி வருகின்றனர். தற் போதைய விலை ரூ.4.15-இலிருந்து  40 காசுகள் குறைவாக நிர்ணயித்து  முட்டைகளை சிறிய பண்ணையாளர்க ளிடமிருந்து கொள்முதல் செய்கின்ற னர். அதேவேளையில், பெரிய பண் ணையாளர்கள் முட்டைகளை குளிர்ப தன கிடங்குகளில் தேக்கி வைத்து வெளிச்சந்தையில் விற்பனைக்கு அனுப்புவதாகவும், வியாபாரிகளுடன் அவர்கள் கைக்கோத்து கொண்டு செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உற்பத்தியான முட்டை களை தேக்கி வைக்க முடியாமல் குறை வான விலைக்கு வியாபாரிகளுக்கு முட்டைகளை விற்க வேண்டிய கட்டா யத்துக்கு சிறிய பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அதிக நஷ்டத்தை சந்தித்து வரும் சிறிய கோழிப்பண்ணையாளர்கள் நாமக்கல் -  சேலம் சாலையிலுள்ள தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க அலு வலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், நாமக்கல் மண்டலத்தில்  800க்கும் மேற்பட்ட சிறிய கோழிப் பண்ணையாளர்கள் உள்ளனர். ஒரு வியாபாரி 50 காசுகள் குறைவாக முட்டையை கொள்முதல் செய்தால், மாவட்டம் முழுவதும் அதே நிலை  நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கி ணைப்புக்குழு நிர்ணயிக்கும் விலையை வியாபாரிகள் ஏற்பதில்லை.  சங்க நிர்வாகிகளும் இதற்கு எதிர்ப் புத் தெரிவிப்பதில்லை. பெரிய பண் ணையாளர்கள் சத்துணவு, ஏற்றுமதி வகையில் பயனடைகின்றனர். ஆனால்  சிறிய பண்ணையாளா்கள் முட்டை களை சில்லறை விற்பனைக்கு கொடுத் தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள னர். இதற்கு நிரந்த தீர்வு ஏற்படுத்த வேண்டும், என்றனர்.