tamilnadu

img

கோவையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்களுக்கான ஆய்வுக்கூட்டம்

கோவைம் மே 04-
கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகக் கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளின் தொடர்ச்சியாக அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் திங்களன்று நடைபெற்றது.
கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கள ஆய்வுப்பணி இயக்குநர்கள், புவியியல் மற்றும் சுரங்கத்துறை எ.சரவணவேல்ராஜ், சிட்கோ மேலாண்மை இயக்குநர் ஆர்.கஜலெட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர். மேலும், இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னாராமசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

இக்கூட்டத்தில் கள ஆய்வுக்குழு அலுவலர்கள் தெரிவித்துள்ளதாவது:
கோவை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் அரசு ஊரடங்கு உத்தரவினை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இப்பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், காவல்துறையினர் மற்றும் பணிகளில் உள்ள அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் அனைவரும் தவறாது முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாதவர்கள் மீது அபராதம் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், மாநகராட்சியிலுள்ள 12 அம்மா உணவகங்களில் மற்றும் மார்க்கெட்களில் சமூக இடைவெளியை அனைவரும் தவறாது கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள், வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை தவறாது மேற்கொள்ள வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினியினை தினசரி 3 முறை தெளிக்கும் பணிகளையும், மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கள ஆய்வுக்குழு அலுவலர்கள் தெரிவித்தார்கள்.