tamilnadu

img

கோவை ரயில் நிலையம் ஆதர்ஷ் ரயில் நிலையமாகிறது

புதுதில்லி, ஜூலை 25- கோவை ரயில் நிலையம், ‘ஆதர்ஷ்’  ரயில் நிலைய மாக, அதாவது முதன்மை மேம்படுத்தப்பட்டிருப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் எழுப்பியிருந்த கேள்விக்கு, மத்திய  ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. புதனன்று நட்சத்திரக்குறியிட்ட கேள்விகளை எழுப்பும் நேரத்தில், பி.ஆர். நடராஜன், கோவை ரயில் நிலையம் ஆதர்ஷ் ரயில் நிலையமாக மேம்படுத்தப்பட இருக்கிறதா என்று கேட்டிருந்தார். கோயம்புத்தூர் ரயில்நிலையம் ஏற்கனவே 2012-13ஆம் ஆண்டில் ஆதர்ஷ் நிலையமாக அடையாளம் காணப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்கீழ் ரயில்நிலையத்தின் முகப்புத் தோற்றம், சுற்றுப்புறப் பகுதிகள், ஓய்வு அறை, கட்டணக் கழிப்பிட வசதி, நடைமேடைகள், பயணிகள் வழிகாட்டும் அமைப்புமுறை, ரயில் பெட்டிகள் நிற்கும் இடத்தைக் குறிப்பிடும் பலகைகள்  முதலானவற்றிற்கு வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றன. இந்நிலையத்தை நவீனப்படுத்துவதற்காக கூடுதலாக நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. நவீனமயத்திற்கான நிதி பயணிகள் திட்டத்திற்கு ஒதுக்கிய தொகைகளிலிருந்து பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார். (ந.நி.)