புதுதில்லி, டிச. 16- ஒன்றிய அரசாங்கம் கொண்டு வர உத்தேசித்துள்ள மின்சாரத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்திட வேண்டும் என்று மார்க்கிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத்தலைவர் பி.ஆர். நடராஜன் கூறினார். நாடாளுமன்ற குளிக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற நடத்தை விதி 377ஆவது பிரிவின்கீழ் அவச ரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் பி.ஆர். நடராஜன் பேசியதாவது: 2021 மின்சாரத் திருத்தச் சட்டமுன் வடிவு என்கிற மக்கள் விரோ தச் சட்டமுன்வடிவினை ஒன்றிய அரசாங்கம் முன்மொழிந்திருப்ப தற்கு என் கடும் ஆட்சேபணையைப் பதிவு செய்கிறேன். முன்மொழி யப்பட்டுள்ள இந்தச் சட்டமுன்வடி வின் நோக்கமும் குறிக்கோள்க ளும் மின்சார விநியோகத்தை முழு மையாகத் தனியாரிடம் தாரை வார்த்திட வேண்டும் என்பதேயா கும். இந்தச் சட்டமுன்வடிவினை 12 மாநில அரசங்கங்களும்/யூனி யன் பிரதேசங்களும் கடுமையாக எதிர்த்தபோதிலும், ஒன்றிய அர சாங்கம் அவற்றின் கருத்துக்களை யெல்லாம் புறந்தள்ளிவிட்டு, இதனை நிறைவேற்ற முடிவு செய்திருக்கிறது.
இந்தச் சட்டமுன்வடிவு அமல் படுத்தப்பட்டால், மின்சாரக் கட்ட ணங்களை நிர்ணயிக்கம் அதிகாரம் மாநில அரசாங்கங்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும். தற்போது விவசாயிளுக்கான பம்ப்-செட்டு ளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் அளிக்கப்பட்டு வருவது போன்று சமூகக் கடமைக ளை தனியார் கார்ப்பரேட் நிறுவ னங்கள் நிறைவேற்றும் என எதிர் பார்க்க முடியாது. மின்கட்டணங்கள் பல மடங்கு உயரும். மேலும், பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மின் ஊழி யர்களின் வேலைப் பாதுகாப்பு, வாழ்வாதாரங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பயன்பாடுகள் பாதிக்கப்படும். எனவே, மாநில அரசாங்கங்க ளின் அரசமைப்புச்சட்டத்தின் 246 ஆவது பிரிவின்கீழ் மாநில அரசாங் கங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரி ைகளைப் பாதுகாத்திட, ஒன்றிய அர சாங்கம் கொண்டுவர உத்தேசித் துள்ள, 2021 மின்சாரத் திருத்தச் சட்ட முன்வடிவினை ரத்து செய்திட வேண்டும். இவ்வாறு பி.ஆர். நடராஜன் பேசினார். (ந.நி.)