ஆவடி மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள், அலுவலக ஊழியர்களுக்கு சீருடை தொகுப்புகளை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். இதில் மேயர் உதயகுமார், மண்டலக் குழு தலைவர்கள் ஜி.ராஜேந்திரன், என்.ஜோதிலட்சுமி, மாநகரப் பொறியாளர் பி.வி ரவிச்சந்திரன், மாநகர நல அலுவலர் சரஸ்வதி, தூய்மை பணி அலுவலர்கள் முகைதீன், குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
