tamilnadu

img

கே.ஜி.டெனிம் ஆலையின் தொழிலாளர் விரோதப்போக்கு தமிழக அரசு தலையிட சிஐடியு வலியுறுத்தல்

கே.ஜி.டெனிம் ஆலையின் தொழிலாளர் விரோதப்போக்கு தமிழக அரசு தலையிட சிஐடியு வலியுறுத்தல்

மேட்டுப்பாளையம், மே 21- கே.ஜி.டெனிம் தொழிற்சாலை முன் பாக மூன்றாவது நாளாக சிஐடியுவினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கே.ஜி.டெனிம் ஆலை யின் தொழிலாளர் விரோத போக்கு தொடர்வதால், தமிழக அரசும், தொழி லாளர் நலத்துறையும் உடனடியாக தலையிட வேண்டும் என சிஐடியு பஞ் சாலை தொழிலாளர் சம்மேளனம் வலியு றுத்தி உள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் தாலுகா ஜடையம்பாளை யம் ஊராட்சியில் உள்ள  கே.ஜி.டெனிம் தொழிற்சாலை எவ்வித முன்னறிவிப் பும் இன்றி திடீரென ஆலையை மூடி யது. நிற்கதியாக நின்ற தொழிலாளர் கள், தங்களின் வாழ்வாதரத்தை பாது காக்கும் ஒரே அமைப்பு சிஐடியுதான் என் பதை உணர்ந்து சங்கத்தின் பின்னே  அணிதிரண்டனர். இதன்தொடர்ச்சி யாக, மூன்று மாத சம்பளம், இரண்டு வருட போனஸ், இஎஸ்ஐ, பிஎப், பணிக் கொடை ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து தொடர்ந்து மூன்றாவது நாளான (புதனன்று) காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.  சிஐடியு கோவை மாவட்ட மில் தொழிலாளர் சங்க துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், பொருளாளர் ஆனந் தன், சிபிஎம் தாலுகா செயலாளர் கே. கனகராஜ் மற்றும் கேஜி டெனிம் தொழிற் சங்க சிஐடியு நிர்வாகிகள் உள்ளிட்டோர் இப்போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். முன்னதாக, ஆலை  முன்பு நடைபெற்றுவரும் போராட் டத்தை வாழ்த்தி, திமுக மாநில  தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம் தொழிலாளர் களை சந்தித்து ஆதரவை தெரிவித்து வாழ்த்திப் பேசினார்.  தமிழக அரசு தலையிட வலியுறுத்தல் இதுகுறித்து, தமிழ்நாடு பஞ்சா லைத் தொழிலாளர் சம்மேளனம் (சிஐ டியு) பொதுச் செயலாளர் எம். அசோகன் வெளியிட்ட அறிக்கையில், 2025 ஜன வரி 23 ஆம் தேதியிலிருந்து தொழிலா ளர்களுக்கு வேலை மறுத்து வருகின்ற  கேஜி டெனிம் நிர்வாகம், தொழிலாளர்க ளுக்கு உரிய சம்பளம் வழங்க வில்லை. இரண்டு ஆண்டுகளுக்குரிய போனஸ் வழங்கவில்லை. ஆலையை  இயக்கவில்லை. தொழிற்சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடமும், தொழிலாளர் துறை அதிகாரிகளி டமும் கோரிக்கைகளை எடுத்துச் சென் றுள்ளோம். மாவட்ட ஆட்சியர் தலை யீட்டின் பேரில், பேச்சுவார்த்தை நடை பெற்றது. தொழிலாளர் துறை அதிகா ரிகள் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி யும் தீர்வு கிடைக்கவில்லை. தொழிலா ளர் உதவி ஆணையர் ராஜ்குமாருட னான பேச்சு வார்த்தையில் தொழிலா ளர்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. பேச்சுவார்த்தையில் தொழிலாளர் களுக்கு கொடுக்கப்பட வேண்டிய சம்ப ளம், போனஸ் ஆகியவை வழங்கப் படுவதுடன் ஆலை எப்பொழுது இயக் கப்படும் என்று முறையாக அறிவித்து வேலை இழந்துள்ள தொழிலாளிகளில் சீனியாரிட்டி அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். தொழிலாளர் விரோத போக்குடன் நிர்வாகம் செயல் படக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள் ளது. தீர்வு கிடைக்கவில்லை. 19.5.2025 ஆம் தேதியன்று ஆலை வாயில் முன்பாக தொடங்கிய தொழிலாளர்க ளின் காத்திருப்புப் போராட்டம் மூன்றா வது நாளாக (21-5-2025) தொழிலாளர் கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளருக்கு ஆதரவாக போராட்டத்தை வாழ்த்தி அந்தப் பகுதி யில் செயல்படுகின்ற ஜனநாயக இயக் கங்கள் ஆதரவு தெரிவித்து வருகின் றன. தொழிலாளர்கள் பிரச்சனை தீர்வ தற்கு உரிய நடவடிக்கையை தமிழக அர சும், தொழிலாளர் துறையும் எடுக்க  வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.