tamilnadu

img

பாஜக நிர்வாகி கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது...

கோவை:
கோவை  மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் கடந்த  ஜன.31 ஆம் தேதியன்று பாஜக சார்பில் வேளாண் சட்டத்தை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், கலந்து கொண்ட பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன்,  மத மோதல் மற்றும் கலவரத்தை தூண்டும் வகையில் இஸ்லாமிய மதத்தவரின் இறை நம்பிக்கைகள் குறித்து தரக்குறைவாகவும், இழிவுபடுத்தியும் பேசினார். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பதற்றமான சூழல் ஏற்படவே, அவர் மீது பல்வேறு இடங்களில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன.இதையடுத்து, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் பேசியது தொடர்பாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பிப்.1 ஆம் தேதியன்று கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், வியாழனன்று கல்யாணராமனை குண்டர் தடுப்புசட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கும் படி கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி வியாழனன்று உத்தரவிட்டார். இதையடுத்து கல்யாணராமன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.