மோடியின் ஊழல் அரசு’ வைரலாகும் பாஜகவின் போராட்டம் திருப்பூர்
, மார்ச் 18- பல்லடத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், “மோடியின் ஊழல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்” என பாஜகவினரே முழக்கம் எழுப்பிய போராட்ட காட்சி கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம், பல்லடம் நகர பாஜக சார்பில் கொச வம்பாளையம் சாலையில் செவ்வாயன்று பாஜகவினர் ஆர்ப் பாட்டம் நடத்தினர். அப்போது, பாஜக நிர்வாகிகளே திடீரென “மோடியின் ஊழல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்”, “பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்” என முழக்கங்களை எழுப்பி னர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாஜகவினரே மோடி அரசை கண்டித்து கோஷம் எழுப்பிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கிராம சபைக் கூட்டம் ஒத்திவைப்பு நாமக்கல்,
மார்ச் 18- உலக தண்ணீர் தினத்தையொட்டி நடைபெறும் கிராம சபைக் கூட்டம் மார்ச் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டத்திலுள்ள 310 கிராம ஊராட்சிகளிலும் மார்ச் 22 ஆம் தேதி நடை பெற வேண்டிய உலக தண்ணீர் தின சிறப்பு கிராம சபைக் கூட்டம், நிர்வாக காரணங்களால் 23 ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறும். இதில், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வா கம் மற்றும் சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்தல் மற்றும் இதர பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ள தென, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி சீட்டு மோசடி: புகார் நாமக்கல்,
மார்ச் 18- ஆவத்திபாளையத்தில் தீபாவளி சீட்டு நடத்தி சுமார் 40 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, பெண்கள் பள்ளிப்பாளை யம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம். பள்ளிபாளையம் அருகே ஆவத் திப்பாளையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் உள்ளன. இங்கு வசிக்கும் மாதேஷ் என்பவர், கடந்த சில வருடங்களாக தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில் அப்பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் தீபாவளி சீட்டில் சேர்ந்துள்ளனர். கடந்த வருடம் தீபாவளி சீட்டு மற்றும் பண்டிகை சீட்டு போன்ற வற்றில் பலரும் பணம் செலுத்தி வந்துள்ளனர். சீட்டு நிறுவனத்தின் பெயரில் தவணை புத்தகங்கள் அச்சிடப் பட்டு அதில் கட்டப்பட்ட தவணைத் தொகை வரவு வைக்கப் பட்டுள்ளது. சீட்டு முடிந்து நான்கு மாதங்கள் ஆகியும், மாதேஷ் சீட்டுப் பணத்தை திருப்பித் தரவில்லை. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கேட்டபோது மாதேஷ் முறை யான பதில் அளிக்கவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட பெண்கள் பள்ளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கும்படி கூறியுள்ளனர். எனவே, எங்களுக்கு உரிய சீட்டு பணத்தை மீட்டுத் தர வேண்டும், என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை வைத்தனர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு நாமக்கல்,
மார்ச் 18- சேந்தமங்கலத்தில் ஜல் லிக்கட்டு போட்டி நடத்த அனு மதி வழங்கக்கோரி, ஆட்சி யரிடம் மனு அளிக்கப்பட் டது. நாமக்கல் மாவட்டத்தில் பொட்டிரெட்டிப்பட்டி, எருமப் பட்டி, அலங்காநத்தம், சாலப்பாளையம், குமார பாளையம், மங்களபுரம் உள் ளிட்ட இடங்களில் ஒவ் வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். தற்போதைய நிலையில், எருமப்பட்டி, குமாரபாளை யம், மங்களபுரம், சாலப்பா ளையம் உள்ளிட்ட நான்கு இடங்களில் மட்டுமே ஜல்லிக் கட்டு நடைபெற்றுள்ளது. சேந்தமங்கலத்தில், மாசி மகத்தையொட்டி நடைபெ றும் தேர் திருவிழாவின் போது ஜல்லிக்கட்டு நடை பெறும். ஆனால், இந்த ஆண்டு அனுமதி கிடைப்ப தில் தாமதமானது. இதனால், தேர் திருவிழா முடிவடைந்த நிலையில், ஏப்.12 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த விழாக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதற் கான அனுமதி வழங்கக் கோரி, விழாக்குழுவினர் ஆட்சியர் ச.உமாவிடம் திங்க ளன்னு மனு அளித்தனர்.