மக்கள் பிரச்சனைகளை எதிரொலித்த மாமன்றங்கள்!
பள்ளிபாளையம் நகர்மன்றக் கூட்டத்தில் அதிமுக, திமுக கவுன் சிலர் இடையே ஏற்பட்ட கடும் வாக் குவாதத்தால், கூட்டம் பாதியில் நிறைவு பெற்றது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபா ளையம் நகர்மன்ற சாதாரண கூட் டம் புதனன்று நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பாலமுருகன், நகராட்சி ஆணையாளர் தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 21 வார்டு உறுப்பினர்கள் கொண்ட இந்த நகர்மன்றக் கூட்டத்தில், 19 உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். இக்கூட்டத்தில், 39 தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒவ்வொரு நகர்மன்ற உறுப்பினர் தங்களது கோரிக்கைகளை கூறி வந்த நிலையில், 4 ஆவது வார்டு (அதிமுக) உறுப்பினர் செந்தில், பள்ளிபாளையம் ஆவரங்காடு நக ராட்சி துவக்க பள்ளியின் பொன் விழா ஆண்டு அழைப்பிதழில் முன்னாள் அமைச்சரும், குமார பாளையம் சட்டமன்ற உறுப்பினரு மான தங்கமணியின் பெயரை ஓர மாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதி முக நிர்வாகிகளின் பெயர் வேண் டுமென்றே ஓரங்கட்டப்பட்டுள்ள தாக கூறினார். அப்போது, 19 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் மங்கலம் சுந்தர் என்பவர், அதிமுக கவுன்சிலர் களுடன் திடீர் வாக்குவாதத்தில் ஈடு பட்டார். இதையடுத்து திமுக மற் றும் அதிமுக கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நகர் மன்றத் தலைவரும், துணைத்தலை வரும் தடுக்க முயன்றும், தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், நகர் மன்ற கூட்டத்தினை பாதியில் நிறுத்தி, கூட்டரங்கினை விட்டு வெளியேறி னர். இதனால் கூட்டம் பாதியில் முடிக்கப்பட்டது. உதகை நீலகிரி மாவட்டம், கூடலூர் நக ராட்சி அலுவலகத்தில் திமுக நகர் மன்றத் தலைவர் பர்மிளா தலைமை யில் மாதாந்திர நகர்மன்ற கூட்டம் புதனன்று நடைபெற்றது. இக்கூட் டத்தில் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி என எவ்வித அடிப்படை வசதிகளும் நகராட்சி நிர்வாகத்தினர் அமைத்து தருவ தில்லை. மேலும், இது தொடர்பாக நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தாலும் எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளப்படுவதில்லை என திமுக, காங்கிரஸ் மற்றும் அதி முகவை சேர்ந்த நகர் மன்ற உறுப்பினர்கள் நகராட்சி ஆணை யர் மற்றும் அலுவலக பணியாளர் களை கண்டித்து கூட்டத்தில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு ஈரோடு மாநகராட்சியில் 2025 - 2026 நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப்பதற்கான சிறப் புக் கூட்டம் செவ்வாயன்று நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு மேயர் நாகரத்தினம் தலைமை வகித்தார். துணை மேயர் செல்வராஜ், மாநக ராட்சி துணை ஆணையர் தனலட் சுமி ஆகியோர் முன்னிலை வகித்த னர். 2025 - 2026-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மாநக ராட்சி நிதி குழுத் தலைவர் மல் லிகா நடராஜனிடம் இருந்து மாநக ராட்சி மேயர் நாகரத்தினம் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டம் 20 நிமிடங்க ளில் முடிவடைந்தது. மாநகராட்சியின் வருவாய் மற் றும் மூலதன நிதி, குடிநீர், வடிகால் நிதி, ஆரம்பக் கல்வி நிதி என மொத்த வருவாய் வரவு ரூ.518 கோடி ஆகும். இதில், மொத்த மூல தன செலவு மற்றும் வருவாய் செலவு ரூ.512.18 கோடி ஆகும். உபரி ரூ.5 கோடி இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, நடைபெற்ற சாதாரண கூட்டத்தில், 77 தீர்மானங்கள் அடங்கிய பொருள் வாசிக்கத் தொடங்கும் நேரமில்லா நேரத்தில் பொது பிரச்சனைகள் விவாதத்திற்கு வந்தது. இதில், மாமன்ற உறுப்பினர்கள் தங்களின் வார்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள அடிப்படை வசதிகள் தீர்க்கப்படா தது குறித்து காரசாரமான கேள் வியை எழுப்பினர்.