விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் சார்பில் கொடுமுடி வட் டார வளர்ச்சி அலுவலகம் முன்பு புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விதொச மாவட்ட உதவித்தலைவர் கே.பி. கனகவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் கே.சண் முகவள்ளி, ஒன்றியத் தலைவர் ஆர்.அமிர்த லிங்கம் உள்ளிட்டோர் பேசினர். முடிவில், கொடுமுடி வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு அளித்தனர்.