tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிலம்பத்தில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

கோவை, மே 23-  நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் 12 தங்கம், 3 வெள்ளி பதக்கம் வென்று கோவை  திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் உற் சாக வரவேற்பளிக்கப்பட்டது. சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி அண்மையில் நேபாளம் நாட்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா, பூட்டான், பங்களதேஷ், நேபாளம், உள்ளிட்ட பல்வேறு நாடு களில் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியா சார் பாக தமிழ்நாட்டில் இருந்து கோவையைச் சேர்ந்த 4 வீரர்  வீராங்கனைகள்  பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் நடை பெற்ற சிலம்பம் போட்டியில் ஒற்றை சிலம்பம், இரட்டை சிலம் பம், சுருள் வால், சிலம்பம் சண்டை உள்ளிட்ட பல்வேறு பிரிவு களில் நடைபெற்றது. இதில் கோவை வடவள்ளி  வருண் தற்காப்பு கலை அகாடமியை சேர்ந்த நான்கு மாணவ மாணவி கள் 12 தங்கம், 3 வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இதனைத்தொடர்ந்து வெற்றி பெற்று கோவை திரும்பிய மாணவ - மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் பெற் றோர்கள், பயிற்சியாளர்கள் உற்சாக வரவேற்பளித்த னர். சர்வதேச அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல் பட ஆர்வமுடன் உள்ளதாகவும், நாங்கள் நடுத்தர குடும்பத் தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பொருளாதார ரீதியாக பல  போட்டிகளில் கலந்து கொள்ள முடியாமல் போனதாகவும், தமிழக முதலமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை  அமைச்சர் எங்களுக்கு உதவி செய்தால் மேலும் பல நாடுக ளுக்கு சென்று போட்டியில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்போம், என தெரிவித்தனர்.

வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளுக்கு சீல்

தருமபுரி, மே 23- தருமபுரி வீட்டுவசதி வாரியத்தில் உள்வாடகை, பணி ஓய்வுபெற்றும் ஒப்படைக்காதது உள்ளிட்ட விதிமீறல் தொடர்பாக 25 குடியிருப்புகளுக்கு வாரிய அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ஒசூர் வீட்டுவசதி பிரிவுக் குட்பட்ட தருமபுரி மாவட்டம், அவ்வை நகர், அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு திட்டத்தில் 180க்கும் மேற்பட்ட குடியி ருப்புகள் உள்ளன. இக்குடியிருப்புகளில் உள்வாடகை, பணி  மாறுதல் மற்றும் பணியிலிருந்து ஓய்வுபெற்றும் குடியிருப்பை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வசம் ஒப்படைக்காதது உள் ளிட்ட விதிமீறல் குறித்து வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் வியா ழனன்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, மூன்று  குடியிருப்புகள் உள்வாடகைக்கு விட்டிருப்பது தெரியவந் தது. அதேபோல, 13 குடியிருப்புகள் பணி ஓய்வுக்கு பிறகு வாரியத்திடம் ஒப்படைக்காதது உள்ளிட்ட பல்வேறு விதி முறைகளை மீறிய 25 குடியிருப்புகள் பூட்டி ‘சீல்’ வைக்கப் பட்டது.