கோவை : கோவையிலுள்ள விமானப்படை கல்லூரிக்குப் பயிற்சிக்கு வந்த பெண் அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் , சக விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார் .
டெல்லி, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 30 அதிகாரிகள் பயிற்சி பெறும் பொருட்டு கோவையில் உள்ள விமானப்படை பயிற்சிக் கல்லூரிக்கு வந்துள்ளனர். இதில் டெல்லியைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவரை, சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரி அமிர்தேஷ் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பெண் அதிகாரி அளித்த புகாரின் பேரில் , கோவை காவல்துறையினர் அமிர்தேஷை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
விமானப்படை அதிகாரியைக் கைது செய்ய காவல்துறையினருக்கு அதிகாரமில்லை என அமிர்தேஷ் தரப்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாகப் பதிலளிக்க காவல்துறை அவசாகம் கேட்டதையடுத்து, விமானப்படை அதிகாரியை ஒரு நாள் ரிமாண்ட் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் உடுமலைப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.