வால்பாறை அடுத்த ஊசிமலை தேயிலை தோட்டப் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி, சிறுத்தை தாக்கி உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த ஊசிமலை எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் ஐயூன் அன்சாரி (வயது 41), மனைவி பெயர் நசீரான். இவர்கள் அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய 4 வயது குழந்தை வீட்டின் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, சிறுத்தை ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் வாயில் கவ்வி கொண்டு 14-ஆம் நம்பர் காட்டிற்குள் சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சிறுமியை தேடி சென்றபோது, அப்பகுதியில் உள்ள காட்டிற்குள் போட்டுவிட்டு சென்றது. தகவல் அறிந்த அங்கு வந்த வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர், சிறுமியின் உடலை கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது.