கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில் உள்ளது அருமனை பேரூராட்சி. ‘ஊமையாய் வாழாதே.. மோதி அழி அல்லது தியாகம் செய்’ என்று முழங்கிய கம்யூனிஸ்ட் இயக்க மறவர்கள் தோழர்கள் பாபு மற்றும் செல்லையன் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.மண்டைக்காடு கலவரத்தைத் தொடர்ந்து தனது மதவெறிக் கொடுக்குகளை விரித்தது ஆர்எஸ்எஸ் கூட்டம். அத்தகைய மதவெறிக் கெதிரான இயக்கத்தைக் கட்டி வளர்த்தது கம்யூனிஸ்ட் இயக்கம். இவ்வியக்கத்தில் முன்னணியில் நின்றனர் மார்க்சிஸ்டுகளான அருமனை தோழர்கள் பாபு மற்றும் செல்லையன்.
விடுவார்களா சங்பரிவாரத்தினர்? அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்த காரணத்தால் 1984 மே 10 ஆம் நாள் அந்த கொடியவர்களின் கொடுவாளுக்குப் பலியானார் தோழர் பாபு. உயிர்த்துடிப்பு அடங்கும் முன்பு பாபுவைக் காக்க கையில் தண்ணீர்க் குவளையோடு ஓடிவந்த தோழர் செல்லையனும் அதே இடத்தில் சிதைக்கப்பட்டு பலியானார்.அருமனை தியாகிகளின் தியாக தீப வெளிச்சத்தில் மக்கள் ஒற்றுமைக்கான மகத்தான கம்யூனிஸ்ட் இயக்கம் முன்னேற வேண்டியது காலத்தின் அவசியம்.
பெரணமல்லூர் சேகரன்
அருமனை தியாகிகள் நினைவு நாள் (மே 10)