tamilnadu

img

கொரோனா இறப்பு உண்மையைக் கூறுகின்றனவா உலகநாடுகள்?

கொரோனா பாதிப்பில் இறந்தவர் களின் உண்மை தக வல்களை உலக நாடு கள் தெரிவிக்கின்றனவா என்ற கேள்வியெழுந் துள்ளது.

இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 11 நாடுகளிலி ருந்து அனைத்து விதமான இறப்பு புள்ளி விவரங்களின் பகுப்பாய்வு, அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொள்ளப் பட்டதை விட கடந்த மாதத்தில் 25,000 இறப்புகள் நிகழ்ந்தி ருக்கலாம் என்று நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது. இங்கிலாந்தைப் பொறுத்தவரையில், மொத்த கொரோனா இறப்புகள் உண்மையான எண்ணிக்கையை விட இரு மடங்காக இருக்கலாம். கொரோனா இறப்பு எண்ணிக்கை 17,000- க்கும் அதிகமாக இருக்கும் எனக் கருதப்பட்ட ஒரு நாளில், 41,000 பேர் இறந்தனர் என்று பைனான்சியல் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது.

“கடந்த மாதத்தில், முந்தைய ஆண்டுகளை விட இங்கி லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 11 நாடுகளில் அதிகமா னோர் இறந்துள்ளனர். கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இறந்தோரும் இதில் அடங்கு வர். மொத்த இறப்பு எண்ணிக்கை தொற்றுநோயின் முழு மையான பாதிப்பை உணர்த்துகின்றன.பெரும்பாலான நாடுகள் மருத்துவமனைகளில் நிகழும் கொரோனா பாதிப்பு இறப்புகளை மட்டுமே தெரிவிக்கின்றன என பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.