சேலம், ஜூன் 18- நெல்லையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவரை வெட்டிப் படு கொலை செய்த குற்றவாளிகளை குண் டர் சட்டத்தில் கைது செய்து, கடும் நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி சேலத்தில் சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொருளாளராக செய லாற்றி வந்த அசோக் ஜூன் 12 ஆம் தேதி சாதிய ஆதிக்க சக்தியினரால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய் யப்பட்டார். தமிழகத்தையே அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ள இந்தப் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளை உரிய சட்டப் பிரிவில் கைது செய்யாமல் காவல் துறையினர் அலட்சியம் காட்டி வருகின் றனர். இந்நிலையில் அசோக் படுகொலைக் குக் காரணமான குற்றவாளிகளை உடன டியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். சாதிய ஆதிக்க சக்தியினரின் வெறிச்செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டோரின் குடும் பத்திற்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். மேலும், ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ கம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங் கம், தமிழ்நாடு தீண்டாடை ஒழிப்பி முன் னணி சார்பில் கண்டன இயக்கங்கள் நடை பெற்று வருகின்றன. இதன்ஒருபகுதியாக, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்டக்குழு சார்பில் செவ்வாயன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பி.ராம மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் டி.உதயகுமார், எம்.சேது மாதவன், எம்.குணசேகரன், மேற்கு மாநகர செயலாளர் எம்.கனகராஜ், கிழக்கு மாநகர செயலாளர் பி.ரமணி, வடக்கு மாநகர செயலாளர் எம்.முருகேசன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள், கட்சியின் முன்னணி ஊழியர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.