கோவை, ஜூன் 13– சோவல் நிறுவனம் மற்றும் மெட்ரோ நிர்வாகம் உள்ளிட்ட பெரு நிறுவனங்களின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து சிஐடியு சார்பில் வியாழனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மெட்ரோ ரயில் நிர் வாகத்தில் நடைபெற்ற ஊழியர் விரோத போக்கு மற்றும் ஊழல் நடவடிக்கையை அம்பலப்படுத்தி ஊழியர்களைப் பழிவாங்கும் நட வடிக்கையில் மெட்ரோ நிர்வா கம் ஈடுபட்டு வருகிறது. இதே போன்று சென்னை சோவல் பெரு நிறுவனம் தொழிலாளர் நலச்சட் டங்களுக்கு எதிராகத் தொழிலாளர் களைப் பணி நீக்கம் செய்வது போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனைக் கண்டித்து கோவை தெற்கு வட் டாட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு கோவை மாவட்ட தலைவர் சி.பத்ம நாபன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணை தலைவர் எஸ்.ஆறுமுகம், மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சாலை போக்குவரத்து சம்மேளன பொதுச்செயலாளர் எஸ்.மூர்த்தி உள் ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மெட்ரோ ரயில் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும். தொழிற்சங்க அங்கீகாரம் செய்யப்பட வேண்டும். மேலும் அரசு அலுவலங்களில் செயல்படும் இ-சேவை மைய ஊழியர்களைப் பழிவாங்காதே என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
நீலகிரி
குன்னூரில் மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில செய லாளர் கே.சி.கோபிக்குமார், மாவட்ட செயலாளர் ஜே.ஆல்தொரை, பொரு ளாளர் ரமேஷ் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.