tamilnadu

img

ஆர்எஸ்எஸ் தொழிற்சங்கமும் போராடுவதாக அறிவிப்பு...

புதுதில்லி:
மத்திய பாஜக அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து, ஆர்எஸ்எஸ் இயக்கத் தின் தொழிற்சங்கப் பிரிவான பாரதிய மஸ்தூர் சங் (பி.எம்.எஸ்.)‘போராட்ட வாரம்’ அறிவித்துள்ளது.

நிலக்கரிச் சுரங்கங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு, தடையற்ற பொதுத்துறை விற் பனை, பாதுகாப்பு மற்றும் ரயில்வேஉற்பத்திப் பிரிவுகளை தனியாருக்குக் கொடுப்பது, மாநிலங்களில் நடக்கும் தொழிலாளர் சட்டங்கள் இடை நீக்கம், வேலைநேரஅதிகரிப்பு, ஊதியவெட்டு, அமைப்பு சாரா மற்றும் புலம்பெயர்தொழிலாளர்கள் பிரச்சனைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை பிஎம்எஸ் அறிவித்துள்ளது.

மத்திய அரசை ‘எழுப்பும்’ வாரம் என்றும் போராட்டத்திற்கு பெயரிட்டுள்ள பிஎம்எஸ், வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருதுறைக்காகவும் போராட்டங்கள் நடத்தப்படும்.பி.எம்.எஸ். தொண்டர்கள் ஒவ்வொரு துறையின் அடிமட்டத்தொழிலாளர்களைத் தொடர்பு கொண்டு மத்திய - மாநில அரசுகளின் தற்போதைய கொள்கைகள், அதனால் தொழிலாளர் களுக்கு ஏற்படும் பாதிப்புகளை போராட்ட வாரத்தில் எடுத்துரைப்பார்கள் என்று கூறியுள்ளது.ஜூலை 7-ஆம் தேதி காணொலிமூலம் நடைபெற்ற பிஎம்எஸ் தேசிய நிர்வாகக் குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.