tamilnadu

img

நகைகளை களவாடிய பெண் காவலர் கைது

கோவை, ஜூன் 3 - கோவையில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய 50 சவ ரன் தங்க நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்காமல் மோசடி செய்த பெண் காவலரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை சிங்காநல்லூர் குற்றப்பி ரிவு காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்த வர் சுவப்ன சுஜா. இந்த காவல் நிலை யத்தில் நீதிமன்றம் தொடர்பான பணியை கவனித்து வந்தார்.

இதில், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய் யப்பட்ட நகைகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்து, பின்னர்  அதை உரியவர் களிடம் ஒப்படைக்கும் பணியை செய்து வந்தார். இந்நிலையில் காவல் அதிகாரி சுவப்ன சுஜா, 11  குற்ற வழக்கு களில் தொடர்புடைய 50 சவரன் நகை களை நீதிமன்றத்தில் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.  இதுதொடர்பாக காவல் நிலைய அதிகாரிகள் கேட்டால், முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்ததோடு, சில உயர் அதிகாரிகளின் பெயர் களை பயன்படுத்தி நழுவி வந்துள் ளார்.

நீண்ட நாட்களாக நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படா மல் இருந்த நிலையில், சிங்காநல்லூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சிவக்குமார் சுவப்ன சுஜாவிடம் விசாரணை மேற் கொண்டார். இதையடுத்து பெண் காவ லர் நீண்ட நாள் விடுப்பு எடுத்துச் சென் றுள்ளார்.  இதனைத்தொடர்ந்து, கடந்த பிப்ர வரி மாதம் சுவப்ன சுஜா பணியிடை நீக் கம் செய்யப்பட்டார். இந்நிலையில் உரிய பதில் தராமல் 50 சவரன் நகை களை மோசடி செய்தது தெரியவந் ததை அடுத்து, சுவப்ன சுஜாவை  சிங்கா நல்லூர் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், சுவப்ன சுஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறை யில் அடைத்தனர்.