கோவை, ஜன. 30- மதச்சார்பற்ற இந்தியாவின் அடை யாளத்தை சிதைக்கும் கோட்சேக் களை விரட்டியடித்து காந்தி தேசத்தை பாதுகாப்போம் என்கிற எழுச்சி முழக்கத்தோடு பல்லாயிரக்கணக் கானோர் பங்கேற்ற மனித சங்கிலி இயக்கம் வியாழனன்று நடை பெற்றது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை யின் ஒருங்கிணைப்பில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், என்ஆர்சி, என்பிஆர் கணக்கெடுப் பிற்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டத்திற்கு அறை கூவல் விடுக்கப்பட்டது. இதன்ஒருபகுதியாக ஜனவரி 30 தேசத்தந்தை மகாத்மா நினைவு நாளில் கோவை மக்கள் ஒற்றுமை மேடை யின் ஒருங்கிணைப்பில் காந்திபுரம் நக ரப்பேருந்து நிலையம் அருகில் இருந்து மனித சங்கிலி போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை யொட்டி நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தன்னெழுச்சியோடு பங்கேற்றனர். முன்னதாக போராட்டத்தில் பங்கேற்றவர்கள், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், நாட்டின் பன்முக தன்மைக்கு எதிராகவும், சர்வ தேச அரங்கில் இந்தியாவிற்கு தலை குனிவை உண்டாகும் மக்கள் விரோத சட்டங்களை மத்திய அரசு உடனடி யாக திரும்ப பெற வேண்டும். மதச்சார்பற்ற இந்தியா என்கிற அடை யாளத்தை சிதைக்கும் கோட்சே வின் வாரிசுகளுக்கு இங்கு இட மில்லை, மதவெறியை வீழ்த்தி காந்தி தேசத்தை பாதுகாப்போம், இந்தியா எனது தாய் நாடு என்பது போன்ற எழுச்சிமிக்க முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய மனித சங்கிலி போராட்டம் வ.உ.சி பூங்காவை கடந்து எல்ஐசி சிக்னல் வரை சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமாக ஆண்கள், பெண்கள், குழந் தைகள், மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் என பாகுபாடின்றி கைகளை கோர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மக்கள் மேடையின் ஒருங்கி ணைப்பாளர் சி.பத்மநாபன், சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, தபெதிக பொதுச்செயலாளர் கு.ராம கிருட்டிணன், விசிகவின் சுசி.கலைய ரசன், ஜோ.இலக்கியன், சிபிஎம் முன்னாள் எம்எல்ஏக்கள் கே.சி.கரு ணாகரன், யு.கே.வெள்ளிங்கிரி, ஜமைத் இஸ்லாமிக் உமர்பாரூக், அப்தூல் ஹக்கிம், சமூக நீதிக்கட்சியின் பன்னீர் செல்வம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆறுச்சாமி, திராவிடத் தமிழர் கட்சி வெண்மணி, பியுசிஎல் பாலமுருகன், புரட்சிகர இளைஞர் முன்னணி மலரவன், சிபிஐ(எம்எல்) பாலகிருஷ்ணன், தமிழ்புலிகள் நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட தலைவர் கள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பி னர்.
திருப்பூர்
திருப்பூர் பல்லடம் சாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பிருந்து தொடங்கி காமராஜர் சாலை, மாந கராட்சி சாலை, ரயில் நிலையம், புஷ்பா சந்திப்பு, அவிநாசி சாலை, பங்களா நிறுத்தம், குமார் நகர், எஸ்.ஏ.பி., வரை இந்த மனித சங்கிலி யாக பல்லாயிரக்கணக்கான ஆண்க ளும், பெண்களும் அணிவகுத்து நின்ற னர். கைகளில் தேசியக் கொடி ஏந்தி யும், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்ற பதாகையுடனும், சிஏஏ, என்பி ஆர் உள்ளிட்ட சட்டங்கள் வேண்டாம் என்ற அட்டைகளை ஏந்தியும் கரம் கோர்த்து நின்றனர். திருப்பூர் மக்கள் ஒற்றுமை மேடை நடத்திய மனித சங்கிலி இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர், முன்னாள் எம்எல்ஏ கே.தங்கவேல், மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத் துக்கண்ணன், திமுக மாநகரச் செயலா ளர் டிகேடி மு.நாகராஜ், அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், கோபால்சாமி, கொமதேக மாவட்டத் தலைவர் ரோபோ ரவி, திருப்பூர் சமூக நல்லிணக்க இயக்க தலைவர் வழக்கறி ஞர் பி.மோகன் உள்பட பல்வேறு அரசி யல் கட்சியினர், பொது நல அமைப்பி னர், தொழிற்சங்க தலைவர்கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்துத் தரப்பினரும் அணிதி ரண்டு வந்திருந்தனர்.
ஈரோடு
ஈரோட்டில் நடைபெற்ற மனித சங்கிலி இயக்கத்தில் தமிழக மக்கள் மேடையின் நிர்வாகிகள் தாவூத் மியா கான், கே.துரைராஜ், எஸ்.ஜமேஷ் மற்றும் அரசியல் கட்சியினர், ஜனநாயக இயக்கங்க ளின் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் திரளாளனோர் கலந்து கொண்டனர். இதேபோல் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பேருந்துநி லையம் முன்பிரிருந்து துவங்கப்பட்ட மனித சங்கலிப் போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
நீலகிரி
நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற மனித சங்கிலி இயக்கத்தில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் தலை வர் வி.வி.கிரி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் வி.ஏ.பாஸ்கரன், தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் உதகை இடைக்குழு தலைவர் கே.ராஜேந்திரன், தமுமுக ஹமீது, மதிமுக அட்டாரி நஞ்சன், எஸ்டிபிஐ நிசார் அகமது, எல்ஐசி கோட்ட இணை செயலாளர் எச்.கோபால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கட்டாரியா ,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் ஏ.ஆர்.ஆசரா உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர். குன்னூர் அண்ணா சிலை முன்பு நடைபெற்ற மனித சங்கிலி இயக்கத்திற்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் ஜெ.ஆல்தொரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ரமேஷ், மாவட்டகுழு உறுப்பி னர் வி.மணிகண்டன், பெரிய பள்ளிவா சல் ஜமாஅத் உலமா சபை செயலாளர் முகமது மூசா, சின்ன பள்ளிவாசல் இமாம் மன்சூர் அலி, பர்லியார் பள்ளி வாசல் இமாம் அப்துல் சலாம், தந்தி மாரியம்மன் கோவில் பள்ளிவாசல் இமாம் ஜஹாங்கிர், வெலிங்டன் பள்ளி வாசல் இமாம் நிஜாமுதீன், திமுக ராம சாமி, விசிக சுதாகர், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் இராமசாமி, இப்ரா ஹிம் உள்ளிட்ட எராளமானோர் பங்கேற்றனர். கூடலூர் பேருந்து நிலையம் அருகில் துவங்கிய மனித சங்கிலி இயக்கத்திற்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் எம்.ஏ.குஞ்ஞி முகமது தலைமை வகித்தார். பேருந்து நிலை யம் முதல் தங்கமணி திரையரங்கம் வரை நடைபெற்ற மனிதசங்கிலி இயக் கத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூடலூர் காந்தி திடலில் நடை பெற்ற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் என்.வாசு, இந்திய தேசிய காங்கிரஸ் அம்சா, திமுக பாண்டியராஜன், சிபிஐ குணசேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி சகா தேவன், இந்தியன் முஸ்லிம் லீக் ஹனிபா, அமுமுக ஷாஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.
தருமபுரி
தருமபுரியில் நடைபெற்ற மனித சங்கிலி இயக்கத்தில் திமுக மாவட்டச் செயலாளர் தடங்கம் பெ.சுப்பிர மணி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் பி.டில்லிபாபு, மாவட்டச் செய லாளர் ஏ.குமார்,விடுதலை சிறுத்தை கள் கட்சி வடக்கு மாவட்டச் செயலா ளர் த.ஜெயந்தி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டதலைவர் யாசின் தென்றல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்போராட்டமானது தருமபுரி அரசு மருத்துவமனையில் இருந்து துவங்கி நான்கு வழிச்சாலை வரை நடைபெற்றது.
நாமக்கல்
நாமக்கலில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.ரங்கசாமி, திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் காந்திசெல்வன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஷேக்நவீத்,மதிமுக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பழனி சாமி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், கனசங்கம் பேராசிரி யர் முத்துசாமி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அசோகன், ந.வேலுசாமி, பி.ஜெயமணி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்ற னர்.
சேலம்
சேலத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் மக்கள் ஒற்றுமை மேடை தலைவர் திமுக சுபாஷ் ,செயலாளர் எம். குணசே கரன், சிபிஎம் மாவட்ட செயலா ளர் பி.ராமமூர்த்தி, செயற்குழு உறுப்பி னர்கள் எம்.சேதுமாதவன், ஆர்.குழந்தைவேலு, ஞானசௌந்தரி ஜி.கணபதி, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம், திமுக நிர்வாகி எஸ்.டி.கலைய முதன், விசிக மாநகர நிர்வாகி வேலு நாயக்கர், தமுமுக ஜவாஹிருல்லா, மாவட்ட செயலாளர் ஷேக் முகமது, தமுமுக ஹைதர் அலி அணி செயலாளர் சையத் மூசா, திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி டேவிட், உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கொணடனர்.