tamilnadu

img

திருப்பூர் மாவட்டத்தில் ஏழு ஒன்றியங்களில் இன்று வாக்குப்பதிவு

வாக்குப்பெட்டிகள், பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன

திருப்பூர், டிச. 26 - திருப்பூர் மாவட்டத்தில் திருப் பூர், ஊத்துக்குளி, காங்கயம், பல்லடம், வெள்ளக்கோவில், மூலனூர் மற்றும் தாராபுரம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று  நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு முடியும் நேரமான 5 மணிக்கு வாக்குச்சாவடிக்கு வருவோரை உள்ளே அனுமதித்து டோக்கன் வழங்கப்படும், அவர்கள் வாக்க ளிக்கலாம். முதல் கட்ட தேர்தல் நடை பெறும் ஏழு ஒன்றியப் பகுதிகளில் மொத்தம் 999 பதவிகளுக்கு 3,088  வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர். வாக்களிக்கச் செல்வோர் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட 11 சான்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொண்டு சென்று வாக்கைச் செலுத்தலாம். 

அந்தந்த ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு வாக்குப்பெட்டிகள், வாக்காளர் பட்டியல், அழியாத மை, முத்திரையிடும் அச்சு உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான பொருட்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும்  பணி வியாழக்கிழமை நடை பெற்றது. திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப்பதிவு பொருட்களை அனுப்பும் பணி யினை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் நேரில் பார்வை யிட்டார். திருப்பூர் ஒன்றியத்தில் மொத்தம் 13 ஊராட்சிகளில் 115 வாக்குச்சாவடி மையங்களில் இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்குச் செல்லும் தேர்தல் பணி பொறுப்பு அலுவ லர்கள் வியாழக்கிழமை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்குச் சென்று சேர்ந்தனர். அதேபோல் திருப்பூர் மாவட்டத்  தேர்தல் பார்வையாளர் இரா.கஜ லட்சுமி காங்கயம் ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்தில் வாக்குப்பதிவுக் கான முன்னேற்பாடுகளை பார்வை யிட்டார். காங்கயம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரமேஷ் உள் ளிட்டோர் உடனிருந்து தேர்தல் வாக்குப்பதிவு பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.