திருப்பூர், நவ. 18 - உயர் மின் கோபுரங்களால் பாதிக் கப்பட்ட விவசாயிகள் நீதி கேட்டு திருப்பூர் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப்பட் டனர். விளைநிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்குப் பதி லாக புதைவடமாக மட்டுமே சாலை யோரமாக பதிக்க வேண்டும். பிரிட்டீஷ் கால இந்திய தந்திச் சட் டம் 1885-ஐநீக்கிவிட்டு பாதிக்கப் பட்ட உழவர்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிய சட்டம் நிறைவேற்ற வேண்டும், 2013ஆம் ஆண்டு புதிய நிலமெடுப்புச் சட்டப்படி சந்தை மதிப்பின் அடிப்படையில் நான்கு மடங்கு விலை தர வேண்டும், ஏற்க னவே அமைக்கப்பட்ட மின் கோபு ரங்களுக்கு மாத வாடகை நிர்ண யித்து வழங்க வேண்டும், இப்பிரச்ச னைகள் தொடர்பாக கூட்டியக்க விவசாயிகளுடன் முதல்வர் உடன டியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி ஐம்பது மையங்களில் மறியல் போராட்டம் நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட் டியக்கம் அறிவித்திருந்தது. அதன்படி நவம்பர் 18ஆம் தேதி திங்களன்று பல்லடம் பேருந்து நிலையம் எதிரில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநி லப் பொருளாளர் பெருமாள் கோரிக் கைகளை விளக்கி, வாழ்த்திப் பேசி னார். அத்துடன் கூட்டியக்க நிர்வாகி கள் சாரதி, சோமசுந்தரம், கோபால் மற்றும் வி.பழனிச்சாமி, எஸ்.வெங்க டாசலம், மதிமுக மணி, திமுக மு.சுப்பி ரமணியம், வி.ச. கே.வி.சுப்பிரமணி யம், பழனிச்சாமி உள்ளிட்டோர் பங் கேற்றனர். பேருந்து நிலையம் முன்பாக கோவை - திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டம் காரணமாக இருபுறமும் போக்குவரத்து நிறுத் தப்பட்டது. இதனையடுத்து மறி யலில் பங்கேற்றவர்களை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அங்கு தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மகத்தான தலைவர் கோ.வீரய் யனுக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
காங்கேயம் மறியல்
கூட்டியக்கத்தின் சார்பில் காங்கே யம் மையத்தில் திங்களன்று நடை பெற்ற மறியல் போராட்டத்தில் 14 பெண்கள் உட்பட சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டனர். முன்னதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செய லாளர் முத்து விஸ்வநாதன் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், காங்கிரஸ் மாவட்ட தலைவர் எஸ்.கோபி, கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் மு.ஈசன், தமாகா மாநில செயலாளர் பி.சேதுபதி, தவிச மாவட்ட செயலாளர் ஆர்.குமார், த.வி.ச. (சிபிஐ) மாவட்டத் தலைவர் சின்னசாமி, எஸ்.டி.பி.ஐ.மாவட்ட தலைவர் அபுதாகிர், பு.இ.மு.பொறுப் பாளர் இரா.கவி, மதிமுக மணி, சிபிஎம் குமாரசாமி, வி.ச. தாலுகா செயலாளர் பி.வேலுச்சாமி, ஐ.டி.பி.எல். திட்ட எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ், போராட்ட ஒருங்கி ணைப்பாளர் தங்கவேல் உள்ளிட் டோர் பங்கேற்று கைதாகினர்.
மடத்துகுளம்
இதேபோல், மடத்துக்குளம் தாலுகா கணியூரில் போராட்டத்திற்கு கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தின் தலைவர் காளிமுத்து தலைமை தாங் கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியம், விவசாய தொழிலா ளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம், விவசாய சங்கத்தின் மடத்துகுளம் நிர்வாகிகள் கார்த்தி கேயன், சுப்பிரமணியன், வெள்ளி யங்கிரி, பொன் கனகராஜ் உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்து கொண் டனர். இதையடுத்து போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் அனை வரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
தாராபுரம்
தாராபுரம் அண்ணாசிலை அரு கில் திங்களன்று சாலைமறியல் நடை பெற்றது. கூட்டியக்க நிர்வாகி சிவக் குமார் தலைமை வகித்தார். இப்போ ராட்டத்தில் விவசாயிகள் சங்க நிர் வாகிகள், திரளான விவசாயிகள் மற்றும் சிபிஎம் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துகண்ணன், கூட்டியக்க நிர்வாகிகள் மற்றும் பெண் கள் உள்ளிட்ட சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.