கோவை, செப்.20 – கோவையில் வாலிபர் சங்க விளையாட்டு கழகம் சார்பில் நடத்தப்பட்ட கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக ளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விளையாட்டு கழகத்தின் இருகூர் கிளை சார்பாக கைப்பந்து இறுதி போட்டி ஞாயிறன்று நடைபெற்றது. 8 அணிகள் பங்கேற்ற போட்டிகளில் வாலிபர் சங்க ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதல் பரிசை பெற்றது. இதனைத்தொடர்ந்து இருகூர் டைனமோ கிளப் மைதானத்தில் பரிசளிப்பு விழா நடை பெற்றது. இந்நிகழ்விற்கு வாலிபர் சங்க இருகூர் விளை யாட்டு கழக பொறுப்பாளர் பூபால் தலைமை தாங்கினார்.
இதில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ், இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையை வழங்கி பாராட்டினார். மேலும், இந்நிகழ்வில் சிறந்த வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவை வாழ்த்தி வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமார், இருகூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் கண்ணன் , தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் பழனிச்சாமி ஆகியோர் பேசினர். இந்நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர்.