tamilnadu

img

கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சுடுகாட்டில் தஞ்சமடைந்த கிராம மக்கள்

உத்திரமேரூர்,டிச.14 புதியதாக துவங்கப்பட்ட கல்கு வாரிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சுடுகாட்டில் தஞ்ச மடைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.  உத்திரமேரூர் அடுத்த பழவேறி மற்றும் அதனைச் சுற்றியுள்ள அருங்குன்றம், மதூர், பினாயூர் ஆகிய கிராமங்களில் பல்வேறு தனியார் கல்குவாரிகள் இயங்கி வரு கின்றன. இந்த கல்குவாரிகள் அருகே பல்வேறு கல் அரவை தொழிற்சாலை கள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரிகளில் பூமியிலிருந்து கற்கள் பெயர்த்தெடுக்க சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் வைக்கப்படுகிறது.  இதனால் பல கிலொ மீட்டர் தொலைவிற்கு அதிர்வு ஏற்பட்டு வீடுகளில் விரிசல் விடுகிறது. இதுமட்டுமின்றி கல்குவாரிகளி லிருந்து வெளியேறும் லாரிகள் கிரா மப்புற சாலைகளைப் பழுதாக்கி போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக மாற்றி விடுகிறது.  மேலும் இந்த சாலையில் அவ்வப்போது விபத்துக்கள் நடந்து உயிரிழப்பும் ஏற்படுகிறது.  கல் அரவை தொழிற்சாலையிலிருந்து வெளி யேறும் புகைகளால் கிராம மக்களுக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனை களுக்கு ஆளாகின்றனர். 

இதுமட்டுமின்றி கிராம விவசாயி கள் பயிரிடும் பயிர்களில் இந்த புகை படிவதால் பயிர்கள் வளரா மல் விவசாயம் முற்றிலும் பாதிக்க ப்படுகிறது. இவ்வாறு கனிம வளங்களைக் கொள்ளையடிப்பது மட்டுமின்றி இயற்கை வளங்களை அழித்து வருகின்றனர். இந்நிலையில் பழவேறி கிரா மத்தில் உள்ள மலையடிவாரத்தில் புதியதாக கல்குவாரி தொடங்க கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி சாலை அமைத்து குவாரி பணியினை தொடங்கினர். தகவலறிந்து பழவேறி கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு அலுவலர்களுக்கு இக்கிராமத்தில் குவாரி அமைந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி குவாரிக்கு தடைவிதிக்க வலியுறுத்தி வந்தனர். 

இந்நிலையில் கல்குவாரி ஊழியர்கள் சனிக்கிழமை (டிச.13)மீண்டும் மணல் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதை கண்ட கிராம மக்கள் அங்கு சென்று முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தக வலறிந்த சாலவாக்கம் காவல்துறை யினர் மற்றும் உத்திரமேரூர் வட்டாட்சியர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சு நடத்தி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று கல்குவாரி தொடங்கப்பட்டுள்ளதாக கூறினர்.  இதை ஏற்கமறுத்த கிராம மக்கள் காவல்துறையிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பழவேறி கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் வீடுகளை புறக்கணித்துவிட்டு கிராம சுடு காட்டில் தஞ்சமடைந்து அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். இச்சம்ப வத்தால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.