tamilnadu

img

சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலர்

மார்க்சிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

சேலம், அக்.31- சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட  கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து  மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஆத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே  கண்டன ஆர்ப்பாட்டம் வியாழனன்று நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலு்கா விற்குட்பட்டது பைத்தூர் மலை கிரா மம். இங்கு வசிக்கும் மக்கள் சாதி, வரு மானம், பிறப்பு இறப்பு சான்றிதழ் மற்றும் முதியோர் உதவி தொகை, நிலப்பட்டா உள்ளிட்டவைகள் கேட்டு  விண்ணப்பிக்கும் போது, கிராம நிர் வாக அலுவலர் ஞானவேல் லஞ்சம் கேட்டு அலைகழித்து வருகிறார். இது தொடர்பாக புகார் அளித்தும் வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் எவ்வித நடவ டிக்கையும் எடுக்காமல் அலட்சியம்  காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலரை கண் டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க  மறுக்கும் அரசு உயர் அதிகாரிகளை கண்டித்தும் ஆத்தூர் பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்திற்கு சிபிஎம் தாலுகா செய லாளர் ஏ.முருகேசன் தலைமை தாங் கினார். மாவட்டச் செயலாளர்  பி.இராம மூர்த்தி கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தாலுகா குழு உறுப்பினர்கள் இல.கலைமணி, ஆர்.வெங்கடாசலம், எஸ்.பிரபு, எல்.தங்கம்மாள் வரதராஜ், கருப்பன், பொன்னுசாமி  உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.