கோவை, ஏப். 26- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வணிகமுறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. உலர வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள், பலவகை பழ ஜாம், பழரசம், தயார் நிலை பானம், ஊறுகாய், தக்காளி கெட்சப், ஊறுகனி மற்றும் பழப்பார் தயாரிக்கும் பயிற்சிகள் இம்மாதம் 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் வழங்கப்பட உள்ளன. பயிற்சியில் சேர ஆர்வமுள்ளவர்கள் பயிற்சி நாளன்று ரூ.1500 செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும்ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள அறுவடை பின்சார் தொழில்நுட்பத்துறை பேராசிரியர் மற்றும் தலைவரை தொடர்பு கொள்ளலாம். 0422 6611268 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என வேளாண் பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.