தருமபுரி, ஜன. 17- அரூர் கடை வீதியில் கார், ஆட்டோ வரு வதால் ஏற்படும் நெரிசலை தவிர்க்க சாலையின் மத்தியில் இருசக்கர வாக னங்களை நிறுத்த காவல் துறையினர் நடவ டிக்கை எடுத்துள்ளனர். அரூர் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இக்கிராமத்தினருக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், துணிகள் வாங்க அரூர் நகருக்கு வந்து செல் கின்றனர். இதனால் கடைவீதி எப்போதும் நெரிசல் உள்ள பகுதியாக காணப்படும். இதனால் பகல் நேரத்தில் பேருந்துகள் கடை வீதி வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கார், ஆட்டோ, மினி டோர் உள்ளிட்ட வாகனங்கள் மட்டும் சென்று வரும். இரு சக்கர வாகனங்களில் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், கடைகள் முன்பு வாகனங்கள் நிறுத்து வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை யால் கடைவீதியில் மக்கள் நெரிசல் அதி கரித்தது. இதையடுத்து கடைவீதியில் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்ல காவல் துறையினர் தடை விதித்தனர். ஆனால் தடையை மீறி வாகனங்கள் அவ் வழியாக சென்றது. இதையடுத்து கடை வீதிக்கு இருசக்கர வாகனங்களில் வந்த வர்களை, கடைகளுக்கு முன்பு நிறுத்தாமல் சாலையில் நடுவில் நிறுத்தும்படியும், இரு புறமும் மக்கள் நடந்து செல்லும் வகையில் செய்தனர். இதனால் ஆட்டோ, கார் உள் ளிட்ட வாகனங்கள் கடைவீதி வழியாக செல்லவில்லை. இதனால் கடைவீதியில் பொங்கல் நாளில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டது.