சேலம் காவேரி மருத்துவமனை சாதனை
சேலம், மார்ச் 11- நடக்க முடியாத நான்கு வயது சிறுமிக்கு சிகிச்சை அளித்து மீண்டும் நடக்க வைத்து சேலம் காவேரி மருத்துவ மனை சாதனை புரிந்துள்ளது. சிறுமி ஒருவருக்கு ‘பிந்தைய தொற்று பாலிராடி குலோபதி’ நோய் கண்டறியப்பட்டது. இது உடலில் நரம்பு மற்றும் கால்களில் பலவீனத்தையும் ஏற்படுத்தும் பாதிப்பாகும். இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சேலம் காவேரி மருத்துவமனை குழந்தை நரம்பியல் நிபுணர் மருத்துவர் எம். வெங்கடேசன் ஒரு விரிவான நரம்பி யல் பரிசோதனையை மேற்கொண்டார். பாலிராடிகுலோபதியால் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்து 24 நாட்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்டுகள் தொடர்ச்சியான சிகிச்சை பிறகு, குழந்தை பேசவும் நடக்கவும் முடிந்தது. இதையடுத்து சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.