tamilnadu

img

திருப்பூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

திருப்பூர், மார்ச் 11 - தமிழக அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான 14ஆவது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றுவ தற்கு, மாநில அளவிலான சங்கங்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்து வதை உத்தரவாதம் செய்ய வலியு றுத்தி திருப்பூரில் அரசுப் போக்கு வரத்து தொழிலாளர்கள் இரண்டா வது நாளாக காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர். 14 ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்த தேதியை அறிவிக்க வலியுறுத்தி மார்ச் 10ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அரசுப் போக்குவரத்து தொழிற்சங் கங்களின் கூட்டமைப்பு காத்திருப் புப் போராட்டத்தைத் தொடங்கியுள் ளது. இந்நிலையில் மாநில அரசு சார்பில் ஒப்பந்தப் பேச்சுவார்த் தைக்கு தேதி குறிப்பிட்டு ஊடகங் களில் செய்தி வெளியிடப்பட்டுள் ளது. ஆனால், அதில் மாநில அளவி லான சங்கங்களை அழைக்காமல், பெயரளவுக்குச் செயல்படக்கூடிய துரோக சங்கங்களை வைத்து இப் பேச்சுவார்த்தை நடத்தவும், அதில் ஊதிய ஒப்பந்தம் என்ற பெயரில் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமையைச் சீர்குலைக்கவும் முயற்சித்துள்ளது.

எனவே மாநில அரசின் தொழி லாளர்களை ஏமாற்றும் நடவடிக் கையைக் கண்டித்தும், மாநிலச் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை உத்தரவாதம் செய்வது டன், ஒப்பந்தத்திற்கான நிதி ஒதுக் கீடு செய்யவும், அமைச்சர் பேச்சு வார்த்தையில் பங்கேற்பாரா என் பதை உறுதிப்படுத்தவும் வலியு றுத்தி அரசுப் போக்குவரத்து தொழி லாளர்களின் காத்திருப்புப் போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்ந்து புதன்கிழமையும் நடைபெற்றது. திருப்பூர் காங்கேயம் சாலை மண்டலப் போக்குவரத்து அலுவ லக வளாகத்தில் நடைபெற்ற இந்த காத்திருப்புப் போராட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமி நாதன், ஏஐடியுசி பொதுச் செயலா ளர் சண்முகம், அரசுப் போக்குவ ரத்து ஓய்வுபெற்றோர் சங்க நிர்வாகி  டி.துரைசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில் தொழிற்சங்க கூட்டமைப் பைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 350 பேர் பங்கேற்றனர்.முன்னதாக அரசு, போராடும் சங்கங்களின் நிர் வாகிகளை அழைத்து 14 ஆவது  ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்துவதை உறுதிப்படுத்தும்  வரை இப்போராட்டம் தொடரும்.  ஓடும் சக்கரங்களை நிறுத்தாதே, வேலை நிறுத்தத்தைத் தூண்டாதே என தொழிலாளர்கள் முழக்கமிட்ட னர்.