tamilnadu

காந்திபுரம், உக்கடம் பகுதியில் செயல்பட்டு வந்த காய்கறி கடைகள் இடமாற்றம் மாநகராட்சி ஆணையர் தகவல்

கோவை, மே 17- கோவை காந்திபுரம் மற்றும் உக்கடம் பகுதியில் செயல்பட்டு வந்த காய்கறி மற்றும்  பழக்கடைகள் தற்காலிமாக வேறு இடத் திற்கு மாற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித் துள்ளதாவது, கோவை மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம் நகரப்பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த காய்கறி, கனி கடைகள் டாக்டர். நஞ்சப்பா சாலையிலுள்ள சிறைச் சாலை மைதானத்தில் செயல்பட உள்ளது.  இதேபோல் உக்கடம் பேருந்து நிலையத் தில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் கள் உக்கடம் லாரிப்பேட்டையில் செயல் பட உள்ளது.  மேலும், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த  காய்கறி மொத்த வியாபார கடைகள் தடா கம் சாலையிலுள்ள ஜி.சி.டி பொறியியல் கல்லூரி மைதானத்திலும், பூ மார்க்கெட் கடைகள் தற்காலிகமாக தேவாங்கப் பேட்டை மேல்நிலைப்பள்ளி மைதானத்தி லும் செயல்பட உள்ளது. இவ்வாறு மாந கராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலு வலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள் ளார்கள்.