நாமக்கல், பிப். 21- நாமக்கல்லில், புலம் பெயரும் தொழி லாளர்களின் பயண முன்னேற்பாட்டிற் கான முதன்மைப்பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமையில் நடை பெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, விவேகானந்தா மகளிர் கல்லூரியில், புலம் பெயரும் தொழிலாளர்களின் பயண முன்னேற்பாட்டிற்கான முதன்மைப்பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. அகதிகள் மறுவாழ்வு, தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரகம்சா ர்பில் புலம் பெயரும் தொழிலாளர்களின் பயண முன்னேற்பாட்டிற்கான முதன்மைப் பயிற்சி நாமக்கல் மாவட்டத்தில் 12 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, விவேகானந்தா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், இந்த நவீன காலத்தில் பல்வேறு பாது காப்புகளும், தொலை தொடர்புகளும் உள்ளதால் வெளிநாடுகளுக்கு சென்று வேலைபார்ப்பது மிக எளிதாக உள்ளது.
அதே நேரம் படித்து முடித்துவிட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல் லும் மாணவர்கள் சட்டப்படியாக ஆவணங்களை அரசிற்கு சமர்ப்பித்து முறையாக விசா பெற்று, அரசு பதிவு பெற்ற முகவர்கள் மூலமாக மட்டுமே வெளிநாடு செல்ல வேண்டும். பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களை இணை யதளம் மூலமாக தெரிந்து கொண்டு, உரிய பாதுகாப்புடன் செல்லவேண்டும். அதுமட்டுமின்றி நீங்கள் வேலை பார்க்க வுள்ள நிறுவனம் குறித்த விவரங்களையும், தாங்கள் வைத்துள்ள ஆவணங்களின் நகல் களையும், தங்களின் பெற்றோருக்கு அளிக்க வேண்டும். இதனால், வெளிநாடுகளில் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற் பட்டால் தங்கள் பெற்றோர் இந்திய தூதர கத்தை அணுகி தங்களின் நிலை குறித்து எளிதில் அறிந்துகொள்ள ஏதுவாக அமையும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செ.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் மு.கருணாநிதி உட்பட கல்லூரி முதல் வர்கள், பேராசிரியர்கள், மாணவியர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.