tamilnadu

ஏமாற்றும் மத்திய அரசை, மயிலிறகால் தடவிக் கொடுக்கும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்

திருப்பூர், ஆக. 25– திருப்பூர் பின்னலாடைத் தொழில் துறைக்கு என்று குறிப் பிட்ட எந்த சலுகையையும் அறிவிக்காமல் ஏமாற்றிய போதும், மத்திய அரசை மயிலிற கால் தடவிக் கொடுக்கும் வேலையை திருப்பூர் ஏற்றுமதி யாளர் சங்கம் செய்துள்ளது. இந்தியாவெங்கும் தொழில் துறை கடும் நெருக்கடியில் சிக் கித் தவிக்கிறது. உண்மையை மூடி மறைக்க முடியாத நிலையில் பிரச்சனை வெடித்துக் கிளம்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வேறு வழியில்லாமல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தா ராமன் வெள்ளியன்று தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து சில சலுகைகளை அறிவித்தார். குறிப்பாக நடுத்தர, சிறு, குறு தொழில் துறையினர் மூழ்கும் கப்பலாக தத்தளித்துக் கொண் டிருக்கின்றனர். திருப்பூர் பின்ன லாடைத் தொழில் துறையிலும் 53 சதவிகிதத்திற்கு மேல் உற்பத்தி பங்களிப்பு வழங்குவது நடுத்தர, சிறு, குறு பின்னலாடைத் தொழிலகங்கள்தான். நிர்மலா சீத்தாராமன் அறிவித்த சலு கைகள் என்பதில் பின்னலாடைத் தொழில் துறைக்கு என்று எதுவும் இல்லை. ஆனால் திருப்பூர் ஏற்றுமதி யாளர் சங்கம் முந்திக் கொண்டு அவசரமாக ஒரு வரவேற்பு அறிக் கையை வெளியிட்டுள்ளது. இதில் நிர்மலா சீத்தாராமன் அறி வித்த சலுகைகளுக்கு (?!) வர வேற்புத் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த அறிக்கையிலேயே முதல் ஒரு பத்தியில் மட்டும் வரவேற்பு என்று சொல்லிவிட்டு மீதமுள்ள முக்கால் பகுதி கோரிக்கைப் பட்டியலாகத்தான் உள்ளது. குறிப்பாக கடனைக் கட்டத் தவறும் தொழிலகங்களை என். பி.ஏ., என செயல்படாத சொத் தாக அறிவித்து முடக்கும் நடவ டிக்கையை மத்திய அரசு சமீபத் தில் கடுமையாக்கி உள்ளது. முன்பு 180 நாட்கள் அதாவது 6 மாத காலம் கடனைச் செலுத்தாத நிறுவனங்களைத்தான் செயல் படாத சொத்து என முடக்கும் அறிவிப்பை வங்கிகள் வெளி யிடும். அந்த கால அவகாசத்தை 90 நாட்கள் என 3 மாத காலமாக சுருக்கியுள்ளது. திருப்பூரில் ஏற்கெனவே ஏரா ளமான ஏற்றுமதி நிறுவனங்க ளின் நிதி நிலை மிகவும் நெருக் கடியாகி, கடன் வலையில் சிக்கித் தவித்து வருகின்றன. 3 மாதத்தில் என்.பி.ஏ., என்ற மத்திய அரசின் முடிவு நடைமுறைக்கு வரும் நிலை யில் தற்போதுள்ள பெரும்பா லான நிறுவனங்கள் மூடப்படு வதைத் தவிர வேறு வழியில்லை. மூச்சுத்திணறும் மனிதனின் கழுத்தை நெரிக்கும் செயலாக மத்திய அரசின் அறிவிப்பு இருந் தாலும் அதைப் பற்றி சப்தமில் லாமல், பழையபடி 6 மாத அவ காசம் வேண்டும் என மென்மை யாக முனகியுள்ளது திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்.

தேர்தல் கால அறிவிப்பு ஏமாற்றம்

அதேபோல் மத்திய, மாநில அரசுகளுக்கு செலுத்தும் ஜிஎஸ்டி வரிக்குள் வராத, இதர வரி இனங்களைத் தொழில் துறை யினருக்குத் திரும்பத்தரும் ஆர்ஓஎஸ்சிஎல் எனப்படும் திட்டம் கடந்த மார்ச் 7ஆம் தேதி  தேர்தலுக்கு முன்பாக அறி விக்கப்பட்டு, நிதி ஒதுக்கி அர சாணையும் வெளியிடப்பட்டது. ஆனாலும் இத்திட்டத்தில் இன் றைய தேதி வரை நயா பைசா வைக்கூட மத்திய அரசு விடு விக்கவில்லை. திருப்பூர் தொழில் துறையினருக்கு மட்டும் இத்திட் டத்தில் ரூ.400 கோடி நிலுவை உள்ளது. இந்த தொகையை விடுவித்தாலே மூச்சுத் திண றிக் கொண்டிருக்கும் நிறுவனங் களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்தது போல் இருக்கும். ஆனாலும் என்ன காரணத்தாலோ மத்திய அரசு இந்த நிதியை விடுவிக்கவில்லை. இதைப் பற்றியும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் வலியுறுத்தவில்லை. மாறாக நிர்மலா சீத்தாராமன் அறிவித்த சலுகைத் திட்டங்களை வரவேற்றும் நன்றி தெரிவித்தும் கடிதம் எழுதியதில் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி கெஞ்சலாக கேட்டுள்ள னர். கார்ப்பரேட் நிறுவனங்க ளின் நலனுக்காகப் பாடுபடுவதே தங்கள் ஒரே குறிக்கோள் என செயல்பட்டு வரும் மத்திய பார திய ஜனதா அரசிடம் மயிலிற கால் தடவிக் கொடுத்து ஆதாயம் பெறலாம் என திருப்பூர் ஏற்றுமதி யாளர் சங்கம் எதிர்பார்க்கிறது.  ஏற்கெனவே பணமதிப்பு நீக்கத்தின்போதும், ஜிஎஸ்டி அமலாக்கத்தின்போதும் வாய் திறந்து பேசாத தொழில் துறை, அதன் விளைவாக 30 முதல் 40 சதவிகிதமான திருப்பூர் பொருளா தாரத்தை இழந்தது. இப்போது இருக்கும் நடுத்தர, சிறு, குறு  தொழில்களையும் காவு வாங்கும்  மத்திய பாரதிய ஜனதா அரசின் கொள்கை குறித்து வெளிப்படை யாக விமர்சிக்காமல் தவிர்ப்பது ஆதாயம் தருமா? அழிவைத் தருமா? (ந,நி)