கோயம்புத்தூர், ஜூன் 27– கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யச்சென்ற மூன்று இளை ஞர்கள் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சரவணம்பட்டி அடுத்த கீரணத்தம் பகுதியில் சுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமாக வெண்பன்றி வளர்ப்புக் கூடம் உள்ளது. இதில் வெளியேறும் கழிவுகளை அருகில் 10 அடி ஆழமுள்ள தொட்டியில் விட்டு வருகின்றனர். இந்நிலையில் வியாழ னன்று கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய கோவை இடையர்பாளையம் கோவில் மேடு பகுதியைச் சேர்ந்த ராஜப்பன், வேடியப்பன் மற்றுமொரு வேடியப்பன் மற்றும் இருவர் என ஐந்து பேரை சுப்பிரமணியம் அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து கழிவுநீர் தொட்டி யில் உள்ள தண்ணீரை லாரிகள் மூலம் வெளியேற்றிய பின்னர் தொட்டியில் இருந்த சகதியை வெளியேற்றி தொட்டியை சுத்தம் செய்வதற்காக முதலில் ராஜப்பன் உள்ளே இறங்கி யுள்ளார். உள்ளே இறங்கியதும் ராஜப் பன் மயக்கமடைந்துள்ளார். இதனைக் கண்ட இரண்டு வேடியப்பன்களும் ஒருவர்பின் ஒருவராக தொட்டியில் இறங்கியுள்ளனர். 3 பேரும் மயக்கம் அடைந்து கழிவுநீர் தொட்டியினுள்ளே உயிரிழந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி யடைந்த அங்கிருந்தவர்கள் உடனடி யாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை மூன்று பேரின் உடல்களையும் கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியே எடுத்தனர். இதனையடுத்து பிரேத பரி சோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோவில் பாளையம் காவல்துறையினர் பன்றி வளர்ப்பு கூடத்தின் உரிமையாளர் சுப்பிரமணியத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த மூவரும் தர்மபுரி மாவட்டத் தைச் சேர்ந்தவர்கள். பிழைப்பிற்காக சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட குடும் பங்கள் கோவை கோவில் மேடு பகுதியில் தற்காலிக குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இங்குள்ள வர்கள் அவ்வப்போது கிடைக்கும் வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருபவர்கள். அந்த வகையிலேயே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் வேலைக்குச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. கோவையில் கழிவுநீர்த் தொட்டி களைச் சுத்தம் செய்யச் சென்று விஷ வாயு தாக்கி உயிர்ப்பலி ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பு இதேபோல பெரியகடைவீதி பகுதியில் கழிவுநீர் சுத்தம் செய்யச்சென்று மூன்று இளை ஞர்கள் பலியாகினர். தற்போது கீர ணத்தம் பகுதியில் மூன்று பேர் விஷ வாயு தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கோவை அரசு மருத்துவமனையில் கூடிய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகிகள், பலி யான இளைஞர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண் டும். இதுபோன்ற துயரங்கள் இனியும் தொடராமல் இருக்க கழிவுநீர் தொட்டி யை சுத்தம் செய்வதற்கு அழைத்துச் செல்பவர்களுக்கும், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கும் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தண்டனை வழங்கிட வேண்டும்; கேரளாவைப் போல் கழிவுநீர் தொட்டிகள், பாதாளச் சாக்கடைகளை சுத்தம் செய்ய ரோபோ இயந்திரங் களைப் பயன்படுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். (ந.நி.)