tamilnadu

img

சாதி மறுப்புத் திருமணம் செய்தப் பெண்ணைக் கடத்திச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு காவல் துறையினர் தீவிர விசாரணை

கோவை, ஜூன் 21- கோவையில் பெண் கடத்தல் விவகாரம் தொடர்பாக தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வரும் நிலை யில், பெண்ணை அடித்து இழுத்து செல்லும் வீடியோ வெளி யாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.  கடந்த ஜூன் 5ஆம் தேதியன்று சாதி மறுப்புத் திரும ணம் செய்து கொண்ட தம்பதியினர் கோவையில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வெள்ளியன்று அப் பெண்ணை அவரது உறவினர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து அப்பெண் ணின் கணவர் துடியலூர் காவல் நிலையத்திகல் புகார் அளித் தார். இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த  துடியலூர் காவல்துறையினர், காவல் துணை ஆய்வா ளர் தாமோதரன் தலைமையில் தனிப்படை அமைத்து பெண்ணின் சொந்த ஊரான திருச்சியில் தனி முகாமிட்டு கடத்தி சென்ற பெண்ணை தேடி வருகின்றனர்.  இந்நிலையில், பெண்ணை அடித்துச் செல்லும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதில் அப்பெண் வலுக்கட்டாயமாக அடித்து இழுத்துச் சென்ற காட்சியும், அவரை மீட்க வருவோரை கட்டை மற்றும் கற்கள் கொண்டு எரிவது போன்ற காட்சியும் இடம் பெற்றிருக்கின்றன. இதனால் கடத்திச் சென்ற பெண் ணின் உயிருக்கு மேலும் ஆபத்து வந்துவிடுமோ என அப் பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் அஞ்சுகின்ற னர்.