tamilnadu

திருப்பூர் மாநகராட்சி மின் கட்டண பாக்கி ரூ.27 கோடி

மூன்றாம் குடிநீர் திட்ட கட்டண சுமையால்


திருப்பூர், செப். 27 – திருப்பூரில் தனியார் மூலம் செயல்படுத்தப்படும் மூன்றாவது குடிநீர் திட்டத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டணச் சுமை கார ணமாகவே மாநகராட்சி நிர்வாகம் மின் கட்டணம் செலுத்த முடியா மல் மிகப்பெரும் நிலுவையாக ரூ.27 கோடி பாக்கி வைத்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி  தொடங்கி 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை கடந்த 2 ஆண்டு காலமாக மாநகராட்சி அலுவலகங்கள், நீரேற்று நிலையங்கள், கல்வி நிலையங்களுக்கு மின் கட்ட ணத்தை மாநகராட்சி நிர்வாகம் செலுத்தாமல் பாக்கி வைத்தி ருக்கிறது. இரண்டாண்டுகளில் ரூ.27 கோடி கட்டண பாக்கி இருக்கிறது என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் மின் கட்டணம் மிக அதிகத்தொகை நிலுவை இருப்ப தால் இக்கட்டணத்தை உடனடி யாக செலுத்தும்படி மாநகராட்சி நிர்வாகத்தை மின்வாரிய அதி காரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். எனினும் மாநகராட்சி நிர்வா கமோ கட்டணத்தை செலுத்து வதாகத் தெரிவித்தாலும் மிகக் குறைந்த தொகையை மட்டுமே செலுத்தி வருவதாகவும் மின்வாரி யத்தினர் தெரிவித்தனர். குறிப் பாக வீட்டிணைப்புகளுக்கு மின் அளவீடு செய்த நாளில் இருந்து 20 நாட்களில் மின் கட்டணம் செலுத்த வேண்டும், தவறினால் அபராதம் விதிப்பதும், மின் இணைப்பைத் துண்டிப்பதும் போன்ற நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன. ஆனால் அரசு அலுவலகங்களுக்கு 60 நாட்கள் காலக்கெடு கொடுக்கப் பட்டுள்ளது. அதையும் கடந்து ஆண்டுக் கணக்கில் கட்டணம் செலுத்தாதபோது, மின்வாரி யத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இது குறித்து மின்வாரிய உயர் அதிகாரிகள், மாநகராட்சி நிர்வாகத்தினருடன் தொடர் சந்திப்புகளை நடத்தியுள்ளனர். திருப்பூர் மாநகராட்சி மட்டுமின்றி வேறு மாநகராட்சிகள், பல்வேறு உள்ளாட்சி நிர்வாகங்கள் இது போல் மின் கட்டண நிலுவை வைத்திருக்கின்றன. எனினும் மிக அதிக தொகை நிலுவை வைத்திருப்பது திருப்பூர் மாநக ராட்சிதான். மக்களுக்கு குடிநீர் வழங்குவது, தெரு விளக்கு உள் ளிட்ட அடிப்படை சேவைப் பணிகளுக்கு மின்சாரம் வழங் கும் நிலையில் கட்டணம் செலுத் தவில்லை என நடவடிக்கை எடுக் கப்பட்டால் மக்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும் என்றும் அதி காரிகள் கூறினர்.

எனினும் திருப்பூர் மாநகராட்சி தரப்பில் இது குறித்து செய்தியா ளர்கள் கேட்டபோது, திருப்பூர் மாநகராட்சிக்கு சொத்து மற்றும் குடிநீர் வரி வருவாய் குறைவா கவே வருகிறது. அதிகமான விலைக்கு குடிநீர் வாங்கி, பொது மக்கள் சேவைக்காக பயன்படுத் துகிறோம். சேவை நோக்கத்து டன் செயல்படுவதால் நஷ்டம் ஏற்பட்டாலும் தொடர்ந்து செய் கிறோம். ஆகவே மின் கட்ட ணத்தை செலுத்த முடியவில்லை. இது தொடர்பாக மாநில அரசிடம் பேசி உள்ளோம். பணம் வந்ததும், உடனடியாக மின் கட்டணம் செலுத்தப்படும் என்றனர். திருப்பூர் மாநகராட்சியைப் பொறுத்தவரை மிக அதிக தொகை மின் கட்டண நிலுவை யாக வைத்திருப்பதற்கு, தனி யார் மூலம் வழங்கப்படும் மூன் றாவது குடிநீர் திட்டத்துக்கு அதிக தொகையை செலவிட வேண்டியிருப்பதே முக்கியக் காரணம் ஆகும். வேறு எந்த மாநகராட்சியிலும் இந்த நிலை இல்லை. திருப்பூரைப் பொறுத் தவரை பொதுவாகவே சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரி வருவாய்க்கும், செலவுக்கும் இடையே பற்றாக்குறை நிலவு கிறது. இதை சமாளிப்பதற்கே சிரமப்பட வேண்டிய நிலையில், மூன்றாவது குடிநீர் திட்டத்துக்கு மட்டும் மக்களின் வரிப்பணத்தில் இருந்து கணிசமான தொகை செலவிடப்படுகிறது. குடிநீர், வடி கால் வாரியம் மூலம் பெறப்படும் குடிநீர் ஆயிரம் லிட்டருக்கு ரூ.10க்கும் குறைவாக செலுத்தும் நிலையில், புதுத்திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகத்திடம் பெறப்ப டும் மூன்றாவது திட்ட குடிநீர் 1000 லிட்டருக்கு ரூ.25க்கும் மேல் தர வேண்டியுள்ளது. இந்த கட்டணத்தில் 2 கோடி லிட்டருக்கு மேல் குடிநீர் வாங்கப்படுவதால் ஒவ்வொரு நாளும் ரூ.5 லட்சத் துக்கும் மேலாக புதுத்திருப்பூர் மேமம்பாட்டுக் கழகத்துக்குச் செலுத்த வேண்டியிருக்கிறது. இதுதான் மாநகராட்சி வருவா யில் பெரிய செலவாக உள்ளது. இதனால் கடன் சுமை ஏற்படுவது டன், பிற வளர்ச்சிப் பணிகளும் பாதிக்கப்படுகின்றன. தனியார் மூலம் குடிநீர் வழங்குவது என்ற திட்டத்தை ஆட்சியாளர்கள் டாம் பீகமாக அறிவித்து நடைமுறைப் படுத்தினர். ஆனால் அதன் அனு பவம் என்பது மக்களுக்கு மட்டு மின்றி மாநகராட்சிக்கும் பெரும் சுமையாகத்தான் உள்ளது என் பதை மின் கட்டண பாக்கியே நிரூபிக்கிறது.

 (ந.நி)